Viral Video: இணையத்தில் பலவித வீடியோக்கள் தினமும் வலம் வருகின்றன. இவற்றில் சில வீடியோக்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்து விடுகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் (Wedding) என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணமாகும். அனைவருக்கும் தங்கள் திருமணம் குறித்த பலவித கனவுகள் இருப்பது வழக்கம். காதலித்தவரையே கைபிடிக்கும் அதிர்ஷ்டசாலிகளுக்கு இது இன்னும் சிறப்பு வாய்ந்த தருணமாக மாறி விடுகிறது.


மகிழ்ச்சியும் பூரிப்பும் ததும்பும் அப்படிப்பட்ட ஒரு திருமண நிகழ்வின் வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகியுள்ளது. இதில், அந்த மணப்பெண்ணின் குதூகலம் அப்பட்டமாகத் தெரிகிறது.


இந்த வீடியோவில், மணப்பெண், தனது மாப்பிள்ளைக்காக ஆவலுடன் காத்திருப்பதைக் காண முடிகிறது. மாப்பிள்ளை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ வரும்போது, மணமகள் அவரை நோக்கி கை அசைத்து, அவருக்கு ஃப்ளையிங் கிஸ்ஸூம் அளிக்கிறார்.


இந்த வீடியோவில் (Viral Video) , மணமகள், அழகான சிவப்பு நிற லெஹெங்கா அணிந்துள்ளார். மணமகன் ஊர்வலமாக வந்து திருமண மண்டபத்துக்குள் வந்தவுடன் அவர் பால்கனிக்கு ஓடி வந்து அவரைப் பார்க்கிறார். மணமகன் மேல் நோக்கி பார்க்கும்போது, மணமகளின் முகத்தில் மகிழ்ச்சி அப்பட்டமாகத் தெரிகின்றது. மணமகள், உற்சாகமாக மணமகனை நோக்கி கை அசைத்து, ஃப்ளையிங் கிஸ் அளித்து, அவருக்கு கை தூக்கி வாழ்த்து தெரிவிக்கிறார்.


ALSO READ: Viral Video: காதலில் விழுவது என்றால் இதுதானா? ஆடிய ஜோடி, ஆடிப்போன ஸ்டேஜ்


இந்த வீடியோ விட்டி வெட்டிங் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கால் பதிவேற்றப்பட்டது. ‘மணமகளால் தனது மணமகனைப் பார்க்க காத்திருக்க முடியவில்லை. ஆவலுடன் வந்து எட்டிப்பார்க்கிறார்’ என்று இந்த பதிவுக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.


மணமகன் வந்தவுடன் அந்த மணமகளின் (Bride) முக பாவத்தைக் காண அருமையாக உள்ளது. மணமகள் அன்பு, பாசம், காதல் என அனைத்து வித உணர்ச்சிகளுடனும் மணமகனைப் பார்த்து கை அசைப்பது நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


இந்த வீடியோயோவுக்கு பலர் இதய எமோஜிக்களை அளித்துள்ளனர். இந்த ஜோடி, ‘மேட் ஃபார் ஈச் அதர்’ என்றும், இருவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்றும் பலர் கமெண்டில் தெரிவித்துள்ளனர்.


ALSO READ: Viral Video: கூலாக கார் ஓட்டி மண்டபத்துக்கு வந்த மணமகள், குவியும் பாராட்டு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR