கடந்த சனிக்கிழமையன்று, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டியில் நெதர்லாந்திற்கு எதிராக பங்களாதேஷ் அணி தோல்வி அடைந்தது.  இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த நெதர்லாந்து 50 ஓவர் முடிவில் 10 விக்கெட்களை இழந்து 229 ரன்கள் அடித்தது.  230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் 142 ரன்களுக்கு இழந்தது.  இதனால், நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  இந்த தோல்வியை மைதானத்தில் இருந்து பார்த்த வங்கதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தனது விரக்தியை வெளிப்படுத்தினார். மைதானத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பங்களாதேஸ் வீரர்களை கடுமையாக சாடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மெட்ரோவில் தொங்கியபடி செல்லும் பெண்கள்! வைரலாகும் வீடியோ!


இந்த ரசிகர் விரக்தியில் செய்யும் செயல் வீடியோவாக தற்போது சமூக ஊடக தளமான Xல் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த ரசிகர் தனது விரக்தியை வார்த்தைகளால் வெளிப்படுத்தியதோடு, கோபத்தில் தன்னைத்தானே செருப்பால் அடித்து கொள்கிறார்.  இந்த வீடியோவின் தலைப்பில், “நெதர்லாந்திடம் தோல்வியடைந்த பிறகு வங்காளதேச ரசிகர் ஷகிப், முஷ்பிகுர் மற்றும் அனைத்து வங்கதேச வீரர்களையும் காலணியால் அறைய வேண்டும் என்று கூறுகிறார், பின்னர் தனது சொந்த செருப்பால் தன்னை அடித்து கொள்கிறார்" என்று எழுதப்பட்டு இருந்தது.  இந்த வீடியோ பதிவிடப்பட்டதையடுத்து, இணையவாசிகளிடம் இருந்து பல எதிர்வினைகள் வந்தன. ஒரு பயனர், “விளையாட்டை விளையாட்டாக பாருங்கள்.. சில நேரங்களில் வெற்றி பெறலாம், சில நேரங்களில் தோல்வி பெறலாம்..  கோபத்தை கட்டுப்படுத்துங்கள் மற்றும் உங்கள் வீரர்களுடன் துணை நில்லுங்கள்" என்று பதிவிட்டு இருந்தார்.



மற்றொரு பயனர், “கென்யா, ஜிம்பாப்வே, பங்களாதேஷ் போன்ற அணிகள் மற்ற அணிகளுக்கு எளிதாக புள்ளிகளை தருகின்றனர்.  ஏனெனில் அவர்கள் வெற்றி பெற எதுவுமே செய்யவில்லை" என்று கூறியுள்ளார்.  "இந்த மாதிரியான அணிகள் பெரிய வெற்றியைப் பெறுவார்கள் என்று மக்கள் ஏன் நம்புகிறார்கள், அவர்கள் தங்கள் பயிற்சியில் பெரியதாக எதையும் செய்யவில்லை, எனவே நீங்கள் பெரிய ஒன்றைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கலாம் ஆம் சில சமயங்களில் அவர்கள் நல்ல அணிகள் என்று அர்த்தமல்ல. . கடந்த 20 வருடங்களாக இது இப்படித்தான் நடக்கிறது.. அதனால் இது ஒன்றும் புதிய விஷயம் இல்லை,” என்று இன்னொரு பயனர் மேலும் கூறினார்.  “அவர்களின் வீழ்ச்சிக்கு சொந்த ஈகோ தான் காரணம்.. அவர்களின் சில வெற்றி அவர்களுக்கு தலையில் ஏறிவிட்டது.  தோனி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியை கேவலமாக நடத்தினர்.  நாகின் நடனத்தைத் தொடங்கினார்... தோனி உலகக் கோப்பையை வென்றார், அவர்கள் கீழ்நோக்கிச் சென்றனர்” என்று இன்னொரு பயனர் கூறி உள்ளார்.


மேலும் படிக்க | வெறும் கையால் பாம்பை பிடித்து கெத்து காட்டிய சிங்கப்பெண்-தீயாய் பரவும் வீடியாே!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ