சிங்கப்பூர்: சிங்கப்பூரில் லாக்-டவுன் தொடர்ந்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு, தனது தாய் மெக்டொனால்டிலிருந்து உணவு வாங்கி வந்ததும், மனநல குறைபாடுள்ள ஒரு சிறுவன் கண்ணீர் வடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதை பார்க்கும் போது உங்கள் மனதில் உணர்வுபூர்வமான ஆனந்தம் ஏற்படும். இக்காட்சியில், ஒன்பது வயதான சிறுவன் சிக்கன் நக்கெட்ஸ் மற்றும் ஃப்ரெஞ் ஃப்ரைஸ் சாப்பிட்ட பிறகு, மகிழ்ச்சியில் கண்ணீருடன் அழுவதைக் காண முடிகிறது. மெக்டொனால்ட்ஸ் சிங்கப்பூரில் மே 10 அன்று திறக்கப்பட்டது. அதன்பிறகு, இந்த வீடியோ சமூக ஊடகங்களில் நேர்மறையான எதிர்வினைகளைப் பெற்று வைரலாகியுள்ளது.


 



காரில் அமர்ந்திருக்கும் தாயுடன் வீடியோ தொடங்குகிறது. அவர், "நான் மெக்டொனால்டிலிருந்து உணவு வாங்கி வந்துள்ளேன். சர்ப்ரைஸ்!” என்கிறார். அவர் சிறுவனை சமையலறைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு உணவு மேஜையில் வைக்கப்படுகிறது. ஆரம்பத்தில், ஆடம் தனது தாய் ஏதோ குறும்பு செய்வதாக நினைத்து அழத் துவங்குகிறான். அவன், "நீங்கள் என்னை பயமுறுத்துகிறீர்கள் என்று நினைத்தேன்" என்று கூறுகிறான். பிறகு தாயை அணைத்துக்கொள்கிறான். அவர் மகனுக்கான வாங்கியதை அவனுக்குக் காட்டுகிறார். 


"நான் உன்னை பயமுறுத்த விரும்பவில்லை! நான் உன்னை ஆச்சரியப்படுத்த விரும்பினேன். பார், இது என்ன?" என்று கூறிக்கொண்டே, மகனிடம் உணவைக் காட்டுகிறார். அந்த தாய் இந்த வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்த பின்னர் அந்த வீடியோ வைரலாகியது. தனது மகனுக்கு உணர்ச்சிகரமான உணர்திறன் மற்றும் லேசான மன இறுக்கம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 
 
(மொழியாக்கம்: லீமா ரோஸ்)