Viral Video: இணையத்தில் பலவித வீடியோக்கள் தினமும் வலம் வருகின்றன. இவற்றில் சில வீடியோக்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்து விடுகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணம் (Wedding) என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணமாகும். அனைவருக்கும் தங்கள் திருமணம் குறித்த பலவித கனவுகள் இருப்பது வழக்கம். 


கலாட்டாவும் குதூகலமும் இல்லாத திருமணங்களை காண்பது அரிது. அதுவும் இந்த நாட்களில் நடன நிகழ்ச்சிகள் இல்லாத திருமணங்களை காணவே முடிவதில்லை.


திருமணத்திற்கு வரும் விருந்தாளிகள் முதல் மணமகன், மணமகளே கூட முழு துடிதுடிப்புடன் நடனமாடி சூழலை அமர்க்களப்படுத்துகிறார்கள். இப்படிபட்ட பல வீடியோக்கள் இணையத்திலும் வைரல் ஆகி வருகின்றன.


ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட திருமண வீடியோக்கள், இணையத்தில் ஹிட்டாகி வருகின்றன. புதிதாக திருமணம் ஆன மணமகன் மணமளின் அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஆனால், இந்த வீடியோவில் இருவரும் நடனமாடிக்கொண்டு விழுந்து விடுகிறார்கள் என்பது சிறிது வருத்தத்தை அளிக்கின்றது.


ALSO READ: Viral Video ‘நாங்க வேற மாதிரி’: வித்தியாசமாய் திருமணத்துக்கு வந்த மணமகன், மணமகள்


இந்த ஜோடி அழகான திருமண ஆடைகளை அணிந்து, மேடையில் மெதுவாக நடனமாடுவதை வீடியோ காட்டுகிறது. கூட்டம் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்துகிறது. மணமகனும் மணமகளும் கூட ஒருவருக்கொருவர் நடனமாடுவதை ரசிக்கிறார்கள். ஆனால், திடீரென இருவரும் கீழே விழுந்து விடுகிறார்கள். இதைப் பார்த்த விருந்தினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சிலர் இதைக் கண்டு சத்தமாக கூச்சலிடுகின்றனர்.


இந்த ஜோடி அழகான திருமண ஆடைகளை அணிந்து, மேடையில் மெதுவாக நடனமாடுவதை வீடியோ காட்டுகிறது. கூட்டம் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்துகிறது. மணமகனும் மணமகளும் கூட ஒருவருக்கொருவர் நடனமாடுவதை ரசிக்கிறார்கள். ஆனால், திடீரென இருவரும் கீழே விழ்ந்து விடுகிறார்கள். இதைப் பார்த்த விருந்தினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். சிலர் இதைக் கண்டு சத்தமாக கூச்சலிடுகின்றனர்.


"இதைதான் காதலில் விழுவது என்பதா? இது இப்படி இருக்கும் என எனக்குத் தெரியாது. காதலில் விழுதல்!! எங்கள் இருவருக்கும் என்ன நடந்தது என தெரியவில்லை. எங்கள் எடை மற்றும் ஆடைகளின் எடை எல்லாம் சேர்த்து இப்படி நடந்திருக்கலாம். என்னால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை. பாவம் டேவிட்டுக்கும் ஒன்றும் புரியவில்லை” என்று இந்த வீடியோவை பகிர்ந்த மணமகள் எழுதினார்.


அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ வைரலாகி (Viral Video) விட்டது. நெட்டிசன்கள் இந்த ஜோடியின் அழகான நடனத்தை விரும்பிப் பார்க்கிறார்கள். இந்த அழகான தம்பதியினரின் துடிதுடிப்பையும் வேடிக்கையான மனப்பாங்கையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.


ALSO READ: அய்யோ கேமரா... வித்தை செய்த திருடன்: வேடிக்கையான வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR