Viral Video ‘நாங்க வேற மாதிரி’: வித்தியாசமாய் திருமணத்துக்கு வந்த மணமகன், மணமகள்

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணமாகும். அனைவருக்கும் தங்கள் திருமணம் குறித்த பலவித கனவுகள் இருப்பது வழக்கம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2021, 02:09 PM IST
Viral Video ‘நாங்க வேற மாதிரி’: வித்தியாசமாய் திருமணத்துக்கு வந்த மணமகன், மணமகள் title=

Viral Video: இணையத்தில் பலவித வீடியோக்கள் தினமும் வலம் வருகின்றன. இவற்றில் சில வீடியோக்களுக்கு மக்களின் பேராதரவு கிடைத்து விடுகிறது. அதுவும் கடந்த சில நாட்களாக திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணமாகும். அனைவருக்கும் தங்கள் திருமணம் குறித்த பலவித கனவுகள் இருப்பது வழக்கம். சிலர் தங்கள் திருமணத்தை எளிமையாக நடத்த விரும்புகிறார்கள். சிலரோ தங்கள் திருமண நிகழ்வு ஆடம்பரமாகவும் பிரமாண்டமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

தங்கள் திருமணம் (Marriage) சிறப்பாக நடந்து முடிய அனைத்து திட்டங்களையும் தீட்டி, ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். திருமண நாள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு நாளாக இருக்கவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்.

அப்படிப்பட்ட கனவு பாகிஸ்தானின் (Pakistan) இந்த ஜோடிக்கும் இருந்தது. பாகிஸ்தானின் ஹுன்சா பள்ளத்தாக்கிலிருந்து ஒரு திருமண நிகழ்வில், மணமகனும், மணமகளும் தங்களுக்கு திருமணம் நடக்கவிருந்த மண்டபத்துக்கு செல்ல, JCB வாகனத்தில் சவாரி செய்ய முடிவு செய்தார்கள். இவர்களின் இந்த ஜெ.சி.பி சவாரி தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.

ALSO READ: Viral Video: தன்னை மறந்து ஆடிய மணமகன், ஈடு கொடுத்து தூள் கிளப்பிய மணமகள்

இந்த மணமகனும் மணமகளும் தாங்கள் வந்துகொண்டிருந்த சொகுசு காரை விடுத்து, ஜெ.சி.பி எக்ஸ்கவேட்டரில் சவாரி செய்ய முடிவு செய்தனர். இவர்களது சவாரியின் வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது. பாகிஸ்தான் பத்திரிகையாளரான குலாம் அப்பாஸ் ஷா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்த அவர், அதற்கு, “#VideoViral  பாகிஸ்தானின் ஹுன்சா பள்ளத்தாக்கில் ஒரு துணிகர திருமண சவாரி” என்று தலைப்பிட்டுள்ளார்.

40 வினாடி கொண்ட இந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் தங்கள் திருமண உடையில் காணப்படுகின்றனர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஜேசிபியின் லோடிங் பக்கெட் பகுதியில் அவர்கள் நிற்பதைக் காண முடிகிறது.

இந்த ஜோடி ஜெ.சி.பி-யில் செல்லும்போது, சாலையில் உள்ள மக்கள், கத்தி, கை தட்டி, அவர்களை உற்சாகப்படுத்துவதையும், அவர்களை வாழ்த்துவதையும், ஆரவாரம் செய்வதையும் காண முடிகின்றது. ஜேசிபி நிறுத்தப்பட்டு அவர்கள் அதிலிருந்து இறங்கும்போது பட்டாசுகள் வெடிக்கப்படுவதையும் காண முடிகிறது.

இந்த வீடியோ தற்போது வைரல் (Viral Video) ஆகி வருகிறது. இதற்கு 2500 வியூக்களும் நூற்றுக்கணக்கான லைக்குகளும் கிடைத்துள்ளன. மக்கள் இந்த ஜோடியைப் புகழ்து பல கமெண்டுகளை அளித்து வருகின்றனர். “புது வழியில் தங்கள் புதிய வாழ்க்கையை துவக்க முன்வந்த இந்த கியூட் ஜோடிக்கு வாழ்த்துக்கள்” என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ALSO READ: Viral Video: கூரை மீது ஏறி அமர்ந்து கீழே வர மறுத்த மணப்பெண், காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News