Viral Video: வேற லெவலில் ஆட்டோ ஓட்டி கின்னஸ் சாதனை செய்த சென்னை ஆட்டோகாரர்
சென்னையை சேர்ந்த ஒரு ஆட்டோ ரிக்ஷா டிரைவர், தனது மூன்று சக்கர ஆட்டோவை இரண்டு சக்கரங்களில் ஓட்டிச் சென்ற வீடியோ கிளிப்பை கின்னஸின் இன்ஸ்டா பக்கம் பகிர்ந்துள்ளது.
சென்னை: கின்னஸ் உலக சாதனை அமைப்பு அவ்வப்போது தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பல பழைய சாதனைகளின் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அக்டோபர் 6 ஆம் தேதி, கின்னஸ் அமைப்பு ஒரு வீடியோவைப் பகிர்ந்தது.
2016 ஆம் ஆண்டு, சென்னையை (Chennai) சேர்ந்த ஒரு ஆட்டோ ரிக்ஷா டிரைவர், தனது மூன்று சக்கர ஆட்டோவை இரண்டு சக்கரங்களில் ஓட்டிச் சென்ற வீடியோ கிளிப்பை கின்னஸின் இன்ஸ்டா பக்கம் பகிர்ந்துள்ளது.
இந்த வீடியோவில் ஜகதீஷ் எம் என்ற ஆட்டோ டிரைவர், இரண்டு சக்கரங்களில் தனது ஆட்டோவை 2.2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் செல்வதைக் காண முடிகிறது. இந்த வீடியோ வைரலாகியுள்ளது. ஜகதீஷின் இந்த நம்பமுடியாத ஸ்டண்ட் மக்களை திகைக்க வைத்துள்ளது. இந்த வீடியோ பழைய வீடியோவாக்க இருந்தாலும், தற்போது இது மீண்டும் வைரல் அகி வருகிறது.
வீடியோவைப் பகிர்ந்த, கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம், "ஆட்டோ டிரைவரின் வீர சாகசம். இந்தியாவின் சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜகதீஷ் எம், அசத்தல் சாதனை செய்கிறார்” என்று எழுதியுள்ளனர்.
ALSO READ: Watch viral video:'அம்மாவை பார்க்க போறேன்’; நம்பிக்கையுடன் செல்லும் குட்டி யானை..!!
குறிப்பிடத்தக்க வகையில், ஜெகதீஷ், 'ஆட்டோ ரிக்ஷாவை சைட் வீலில் செலுத்தும் சாதனைக்காக (‘side-wheelie on an auto rickshaw’) கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜெகதீஷ் GWR இடம், "இந்த சாதனையை செய்ய முடியும் என நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்று கூறினார். “ இந்த சாதனையை என்னால் செய்து முடிக்க முடியும் என எனக்கு தோன்றியதில்லை” என்ரு அவர் மேலும் தெரிவித்தார்.
GWR இன் அறிக்கையின்படி, ஜக்திஷ் குறைந்தது 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே இரண்டு சக்கரங்களில் ஆட்டோவை ஓட்ட வேண்டி இருந்தது. ஆனால், அவர் தனது ஆட்டோவை இரண்டு சக்கரங்களில் சுமார் 2.2 கிலோமீட்டர் தூரத்திற்கு ஓட்டி சாதனை படைத்தார்.
"எனக்கு இப்படிப்பட்ட சாதனைகளை செய்ய பிடிக்கும். நான் அப்படி செய்வதை ரசிக்கிறேன். என் ஆட்டோவில் நான் செய்யும் ஸ்டண்ட்களைத் தவிர வேறு எதுவும் என்னை உற்சாகப்படுத்தவில்லை. நான் செய்யும் ஸ்டண்டுகள் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. நான் இரண்டு சக்கரங்களில் ஆட்டோ ஓட்டும்போது பார்வையாளர்கள் என்னை பிரமிப்புடன் பார்க்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
தான் இரண்டு சக்கரங்களில் ஆட்டோ ஓட்டும்போது கிடைக்கும் சிலிர்ப்பு தனக்கு பிடிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ (Viral Video) பகிரப்பட்டதிலிருந்து, வைரலாகி 388,741 வியூஸ் மற்றும் பல கமெண்டுகளையும் பெற்றுள்ளது.
“ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 10 ஸ்டண்ட் டைரக்டர் கண்டுபிடிக்கப்பட்டார்" என்று ஒரு பயனர் எழுதியுள்ளார்.
மற்ற ஒரு பயனர், “ இந்தியர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும்." என்று கூறியுள்ளார்.
ALSO READ: Viral Video: விஷ பாம்பை அசால்டாக கையாளும் 2 வயது குழந்தை..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR