உசுரு முக்கியம் பாஸ் என்பது மனுசங்களுக்கு மட்டும் தானா?. விலங்கு மற்றும் பறவைகளுக்கும் தெரியும் எப்படி தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது எப்படியென. ஒரு சில நேரங்களில் தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மனிதர்களுக்கு கிட்டும் வாய்ப்புகள் விலங்குகளும் பறவைகளுக்கும் கிடைப்பது இல்லை என்பது உண்மை என்றாலும், கிடைக்கிற வாய்ப்பில் எப்படி எஸ்கேப் ஆகுகிறோம் என்பது முக்கியம். விலங்குகளுக்கு பொறுத்தவரை நாள்தோறும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் போராட்டம் தான். அதனால், அவைகளுக்கு தலைக்குமேல் கத்தி எப்போதும் தொங்கிக் கொண்டே இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ’எப்பா சாமி முடியல டா டேய் ’ நண்பனுக்கு உதவ வந்த புண்ணியவான பாருங்க: வைரல் வீடியோ


வேட்டையாடி உணவைத் தேடிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விலங்குகள் இருப்பதால், அவை  சக விலங்குகளை வேட்டையாடும் நிலையில் இருக்கின்றன. இதுதான் பிரதான காரணம். தலையெழுத்தே அப்படி எழுதப்பட்டுவிட்டதால் இதில் இருந்து அவை தப்பிக்க வாய்ப்பே இல்லை. இதனால் தினம் தினம் சமயோசித்தமாக யோசித்து தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவை முயற்சி செய்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் அவை எடுக்கும் முடிவுகளை நேரில் இருந்து பார்த்தால், அவ்வளவு வியப்பாக இருக்கும். பறவைகள் எடுக்கும் தந்திரமான முடிவுகள் மனிதர்களையே ஆச்சர்யப்படுத்தும். 



அப்படியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது, வேட்டையாட காத்திருக்கும் நாயிடம் இருந்து வாத்து சமயோசித்தமாக சிந்தித்து தப்பிக்கிறது.  வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில் நாயின் காலுக்கு அடியில் படுத்திருக்கும் வாத்து, இறந்தது போல் நடிக்கிறது. நாயும் வாத்து இறந்துவிட்டதாக எண்ணி, அதனை சீண்டாது. சிறிது நேரம் கழித்து நாய் அந்த இடத்தைவிட்டு ஒரு சில அடிகள் நகர்ந்ததும், ஜெட் வேகத்தில் அங்கிருந்து ஓடுகிறது வாத்து. இந்த வீடியோ காண்போரை அசர வைக்கிறது. டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ சுமார் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது.


மேலும் படிக்க | குரங்குக்கு கொழுப்பு பாத்தீங்களா..பாவம் அந்த 'பாப்பா': வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ