Viral Video : ’விநாயகருக்கே சோதனை’ மும்பையில் நடந்த கூத்து
மும்பையில் விநாயகர் கால் பாதங்களை பிரித்து பக்தர்களை வழிபட அனுமதித்த சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
மும்பையிலேயே பணக்கார விநாயகர் கோயில் என்றால் அது லால்பக்சா ராஜா தான். ஏன் இந்தியாவிலேயே பணக்கார விநாயகர் கோயில் என்று கூட சொல்லலாம். அம்பானி குடும்பம் முதல் மும்பையில் இருக்கும் ஒட்டுமொத்த பணக்கார்களும் இந்த கோயிலின் பக்தர்கள் தான். 20 அடி உயரத்தில் கம்பீரமாக அமர்ந்து விநாயகர் அருள்பாலிக்கிறார். அதனால் எந்த விஷேஷம் என்றாலும் ஆடம்பரமாகவே இந்த கோயிலில் பூஜைகள் நடைபெறும். விநாயகர் அலங்காரம் முதல் எல்லாமே பக்தர்களின் கண்களை கவரும் வகையில் மிக பிரமாண்டமாக செய்யப்படும். சாதாரண நாட்களிலேயே சிறப்பு அலங்காரம் கண்களை கவரும் வகையில் செய்யப்படும் நிலையில், விநாயகர் சதூர்த்தி விழா நடைபெறுவதால், அலங்காரத்தின் ஆடம்பரம் குறித்து சொல்லவா வேண்டும்?.
மேலும் படிக்க | அரசு பள்ளிக்குள் பீர் குடிக்கும் மாணவிகள்! வைரலாகும் வீடியோ!
தங்க, வைர ஆபரணங்களால் லால்பக்சா ராஜா ஜொலிக்கிறார். அம்பானி குடும்பம் கூட 20 கிலோ தங்க கிரீடத்தை விநாயகர் சதூர்த்திக்காக காணிக்கையாக கொடுத்தனர். பின்னர் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோர் லால்பக்சா ராஜாவை வழிபட்டு சென்றனர். செப்டம்பர் 17 ஆம் தேதி வரை வியாகர் சதூர்த்தி விழா நடைபெற இருப்பதால் அக்கோயில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு ஊர்களில் இருந்து வந்து லாக்பக்சா ராஜாவை வழிபடுகின்றனர். இதனையொட்டி பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் பாதங்களை தொட்டு வணங்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஒரு பாதம் விஐபி தரிசனத்துக்காகவும், இன்னொரு பாதம் எளிய மக்கள் வழிபடுவதற்காகவும் பிரித்துவிடப்பட்டுள்ளது. எளிய மக்கள் விநாயகர் வழிபடும் வழி கூட்டம் அலைமோதும் நிலையில், விஐபி தரிசனம் செய்பவர்கள் ஜாலியாக விநாயகருக்கு அருகிலேயே நின்று செல்பி எடுத்து மகிழ்ச்சியடைகின்றனர். ஒரு பக்கம்கூட்டம் அலை மோதுவதையும், இன்னொரு பக்கம் பணக்காரர்கள் விளையாடுவதையும் வீடியோ எடுத்துப் போட்டு கடவுள் நிச்சயம் இதனை விரும்புவாரா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் வைத்துள்ளனர். பணம் இருப்பவர்களுக்கு தான் கடவுள் எல்லாமே? என்றும் அந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
மேலும் படிக்க | சூரிய கடவுளை பாதிப்பதாக கூறி சோலார் பேனல்கள் அடித்து உடைப்பு - வைரல் வீடியோ உண்மையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ