வைரல் வீடியோ: விஜய் பாட்டுக்கு குடிபோதையில் பேருந்தில் குத்தாட்டம் போட்ட குடிமகன்
விஜய் பாட்டுக்கு குடி மகன் ஒருவர் ஓடும் பேருந்தில் குத்தாடம் போடும் வீடியோ காண்போருக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருக்கும் இந்த வீடியோ அதிகமானோரை கவர்ந்திருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் இருக்கின்றன. மன அழுத்தமாகவோ அல்லது ரிலாக்ஸாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றுவிட்டால் நேரம் செல்வதே தெரியாது. அந்தளவுக்கு பொழுதுபோக்கும் வீடியோக்கள் அங்கு குவிந்துகிடக்கின்றன. அப்படியான ஒரு வீடியோ தான் அதிகமானோரின் கண்களில் பட்டு டிரெண்டிங் லிஸ்டிலும் இடம்பிடித்துள்ளது. குடிமகன் ஒருவர் குடித்துவிட்டு போதையில் பேருந்தில் ஆட்டம்போடுகிறார். அதுவும் விஜய் பாட்டு என்பதால் அவரால் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஆரவாரத்தில் துள்ளிக் குதிக்கிறார். இந்த வீடியோ தான் நெட்டிசன்களை ரசிக்க வைத்துள்ளது.
மேலும் படிக்க | நடு ரோட்டில் பெண்ணின் மாஸ் டாம்ஸ்... வாய் பிளந்த நாய்கள்: வைரல் வீடியோ
குடியும் குடிப்பழக்கமும் ஆபத்தானது என்றாலும், அதனை அளவோடு நிறுத்திக் கொள்ளும்போது நல்லதாக பார்க்கப்படுகிறது. மதுப்பழக்கத்தால் தீமைக்குள் சிக்கி, பல சமூகவிரோத செயல்கள் ஏற்படுவதை மறுக்க முடியாது என்றாலும், ஒரு சில இடங்களில் காமெடியான விஷயங்களும் நடக்கதான் செய்கின்றன. அவர்களால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. அவர்களும் இன்பத்தில் இருந்து, கூட இருப்பவர்களையும் மகிழ்ச்சியில் ஆட்படுத்துவார்கள். அப்படி செய்யும் குடிமகன்களில் ஒருவரின் வீடியோ தான் இப்போது டிரெண்டிங்.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவில் பேருந்து ஓன்றில் விஜய் பாட்டு ஒலிக்கிறது. நான் அடிச்சா தாங்க மாட்ட, நாளு மாசம் தூங்க மாட்ட என பாடிக் கொண்டிருக்க, அந்த பேருந்தில் பயணித்த குடிமகனால் அந்த பாட்டைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. உடனே எழுந்து பாட்டுக்கும் சுதி தாளத்துக்கு ஏற்ப ஆடுகிறார். அவரின் நடன அசைவுகள் பேருந்துக்குள் இருப்பவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்துகிறது. கேரளாவில் இருக்கும் இன்ஸ்டாவில் பகிரப்பட்டிருக்கிறது. காண்போரை ரசிக்க வைக்கும் இந்த வீடியோ மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. லைக்குகள் மட்டும் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமாக கிடைத்திருக்கிறது.
மேலும் படிக்க | நடுரோட்டில் இதெல்லாம் தேவையா.. பல்பு வாங்கிய காதலர்கள்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ