பாம்பு வீடியோக்கள் இணையத்தில் ஏராளமாக இருக்கின்றன. அந்த வீடியோக்கள் அனைத்தும் பார்வையாளர்களை கவர தவறவில்லை. இப்போது அந்த வீடியோக்களுக்கு இணையாக இபோது ஒரு வீடியோ வந்திருக்கிறது. அதில், நீர்த்தேக்கம் ஒன்றில் செல்லும் படகுக்கு மிக அருகாமையில் ராட்சத பர்மீஸ் பாம்பு நீந்தி செல்கிறது. படகில் இருப்பவர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடங்களில் பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவில் பார்க்கும்போது பாம்பு மிகவும் நீளமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் இருக்கிறது. உணவு சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுப்பதற்காக அந்த பாம்பு சென்றிருக்க வாய்ப்பு என வீடியோவில் பாம்பை பார்த்தவர்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தாகத்தால் தவித்த விஷ நாகப்பாம்புக்கு தண்ணீர் கொடுத்த நபர்: வீடியோ வைரல்


ஏனென்றால் பாம்பின் வயிறு ஒரு இடத்தில் மிகவும் பெரிதாக இருக்கிறது. அதனால், ஏதோ ஒன்றை உணவுக்காக வேட்டையாடிவிட்டு செல்கிறது என்று கூறியுள்ளனர். மேலும், பாம்பு படகு அருகே செல்வதை பார்க்கும்போது மிகவும் பயமாக இருப்பதாகவும், இப்படியொரு அதிர்ச்சியான அனுபவத்தை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என ஒருவர் கூறியுள்ளார். பாம்பு செல்லும்போது அமைதியாக அதனை வீடியோ எடுத்துக் கொண்டு இருப்பதெல்லாம் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம் தான், அவர் எப்படி பயப்படாமல் இருந்திருக்கிறார் என்று ஒருவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.



35 நொடிகள் இருக்கும் இந்த வீடியோ WowTerrifying என்ற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. 5.2 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். வீடியோ பார்த்தவரில் ஒருவர் இந்த வீடியோ அமெரிக்காவில் எடுத்திருக்க வாய்ப்புண்டு. ஏனென்றால் அங்கிருக்கும் மாகாணத்தில் ஒன்றில் தான் இவ்வளவு பெரிய பாம்புகள் இருக்கின்றன. வீடியோவில் பார்க்கும்போது இது ஒரு பர்மீஸ் வகை பைத்தான்போல தெரிகிறது என்று கூறியுள்ளார். எது எப்படியிருந்தாலும், பர்மீஸ் பைத்தானின் வீடியோ இப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. 


மேலும் படிக்க | ஆத்தாடி..ஒரே மரத்தில் இத்தனை விஷப் பாம்புகளா? வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ