கைக்குள் உலகை அடக்கி விடலாம் என்பதற்கிணங்க, இப்போது அனைத்து விஷயங்களும் நொடிப்பொழுதில் போனில் பார்க்கும் வகையில் இருக்கிறது. கையில் இருக்கும் இந்த சிறிய டிவைஸை வைத்துக்கொண்டு, உலகில் தென்கோடியில் எங்கோ இருப்பவருடன் நம்மால் இணைய முடிகிறது என்பது இப்போது சகஜமான உண்மையாகி விட்டது. இப்படிப்பட்ட இந்த செல்போன் பயன்பாட்டில், பெரும் பங்கு வகிப்பது சமூக வலைதள பயன்பாடுதான். பல கோடி பேர் பயன்படுத்தும் இந்த சமூக ஊடகங்களில் எப்போதும் நல்ல விஷயங்களே வந்து விடுவது கிடையாது. சில நேரங்களில், நமக்கு தேவையற்ற விஷயங்களும் கண்ணில் தென்படலாம். பல நேரங்களில் நம் இதயத்தையே அதிர செய்யும் பயமுறுத்தும் விஷயங்களும் காண கிடைக்கலாம். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைரல் வீடியோ:


தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஹெவியாக காற்று அடித்துக்கொண்டே இருக்கிறது. அப்படியே அதை சிலர் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கின்றனர். திடீரென்று பயங்கரமான சத்தம் ஒன்று கேட்க, அந்த பல மாடி கட்டடம் அப்படியே தரை மட்டமாகிறது.