Viral Video: ஆந்திரப் பிரதேசத்தின் பார்வதிபுரம் ரயில் நிலையத்திற்கு வழக்கத்திற்கு மாறான பயணி ஒருவர் வந்து சென்றது அனைவரையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்த சம்பவம் அக்டோபர் 29 அதிகாலையில் நடந்ததாக கூறப்படுகிறது.  பார்வதிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து இந்த காணொளி வைரல் ஆகி வருகிறது. அதில், ஒற்றை யானை இரவு நேரத்தில் பயணிகள் ரயிலுக்காக காத்திருக்கும் இடத்தில் உலா வருகிறது. இந்நிலையில், இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தும் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இதேபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருவது குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி உள்ளனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த வீடியோவை ஒருமுறை பாருங்க.. இனி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடவே மாட்டீங்க


பயணிகள் தங்களை பாதுகாத்து கொள்ள தண்டவாளத்தின் மறுபக்கத்திற்கு ஓடி வந்தனர். இந்த வீடியோவை சமூக ஊடக தளமான Xல் பயணி ஒருவர் பதிவிட்டுள்ளார்.  அந்த பதிவில், “யானைகள் நீண்ட இரவு நடைபயணம் மேற்கொள்கின்றன. புதிய பாதைகளை தேடி அவை சுற்றி திரிகின்றன.  இவை யாருக்கும் தீங்கு செய்யாது. வனத்துறையினர் அப்பகுதியில் உள்ள மக்களை வீட்டிற்குள் இருக்குமாறும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வெளியே செல்லும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளனர்" என்று எழுதி உள்ளார்.



இந்த காணொளிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நெட்டிசன்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த கிளிப் நேற்று பகிரப்பட்டு நூற்றுக்கணக்கானவர்களிடமிருந்து கமெண்டுகளை பெற்றுள்ளது.  முன்னதாக, இதே மாவட்டத்தில், கருகுபில்லி மண்டலத்தின் கோட்டிவலசா கிராமத்திற்கு அருகில் உள்ள பயிர் வயல்களுக்கு அருகில் யானைகள் கூட்டம் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. “பார்வதிபுரத்தில் யானைகள் வசிக்கும் காடு இருக்கிறதா, நான் பொப்பிலியைச் சேர்ந்தவன், 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்திற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இதைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை!” என்று பயனர் ஒரு கமெண்ட் செய்துள்ளார்.  


மேலும் படிக்க | நெதர்லாந்திடம் தோற்றுப்போன பங்களாதேஷ்! தன்னைத்தானே செருப்பால் அடித்துக்கொண்ட ரசிகர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ