இந்த வீடியோவை ஒருமுறை பாருங்க.. இனி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடவே மாட்டீங்க

Chocolate Ice Creams Viral Video: சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையத்தை முற்றிலும் வெறுப்படையச் செய்துள்ளது. ஐஸ்கிரீம் தொழிற்சாலையில் ஒரு நபர் சாக்லேட்டில் எண்ணெயைச் சேர்ப்பதை காணலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 14, 2023, 02:25 PM IST
  • தொழிற்சாலையில் சாக்லேட் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படும் வீடியோ.
  • 3.4 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது.
  • வீட்டில் சாக்லேட் ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம்.
இந்த வீடியோவை ஒருமுறை பாருங்க.. இனி ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடவே மாட்டீங்க title=

இன்றைய வைரல் வீடியோ: ஐஸ்கிரீம் என்பது எல்லா வயதினரும் விரும்பி உண்ணும் ஒரு இனிப்பு உணவாகும். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சாப்பிட்டாலும் சரி அல்லது தனியாக ரசித்து சாப்பிட்டாலும் சரி, ஐஸ்கிரீம் அனைவருக்கும் பிடித்தமான உணவாகும். ஆனால் இந்த சுவையான உணவு எப்படி தயார் செய்யப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதன் செயல்முறையை காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் இந்த ஐஸ்கிரீமில் ஒரு சிறப்பு விஷயம் சேர்க்கப்படுவதால், அதைப் பார்த்தவுடன் இணைய வாசிகள் மற்றும் உணவு பிரியர்களை அதிர்ச்சி மற்றும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Planetashish என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவின் தலைப்பு, "ஒரு தொழிற்சாலையில் சாக்லேட் ஐஸ்கிரீம் தயாரித்தல்" என்று எழுதி பதிவிடப்பட்டுள்ளது. ஒரு சுவாரஸ்யமான வீடியோவில், ஒரு தொழிற்சாலைக்குள் சாக்லேட் ஐஸ்கிரீம் (Chocolate Icecream) தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு நபர் ஐஸ்கிரீமை உருவாக்கி அதை ஒரு குலபி போல் தயாரிக்க தொடங்குகிறார். வீடியோ முன்னேறும்போது, ​​​​அவர் பாப்சிகல்ஸை டி-மோல்ட் செய்து சாக்லேட் சிரப்பைத் தயாரிக்கிறார். அடுத்து நடந்தவை பலரின் கவனத்தை ஈர்த்தது மற்றும் இணையவாசிகளை ஆச்சரியப்படுத்தியது. இந்த நபர் நிறைய எண்ணெயைப் பயன்படுத்தி சாக்லேட் சிரப்பைத் தயாரித்து, பின்னர் அதில் பாப்சிகல்ஸை நனைக்கிறார்.

மேலும் படிக்க | சோப்பை சாப்பிடும் பெண்.. கடைசி வரை வீடியோவை பாருங்கள் ஷாக்கா இருக்கும்

தொழிற்சாலையில் சாக்லேட் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படும் வீடியோவை இங்கே காணுங்கள்: 

இந்த வீடியோ கடந்த ஜூன் 7 ஆம் தேதி அன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. இது 3.4 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது, மேலும் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. பலர் தங்கள் கருத்துக்களை கமெண்ட் மூலமாகவும் பகிர்ந்து கொண்டனர். சாக்லேட் சிரப்பில் எண்ணெய் கலக்கப்பட்டிருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சியடைந்த நிலையில், சிலர் இது ஐஸ்கிரீம் இல்லை, ஆயில் க்ரீம் என்று கேலியாக கருத்து தெரிவித்தனர். 

வீட்டில் சாக்லேட் ஐஸ்கிரீம் செய்து சாப்பிடலாம்:
எனவே இது போன்ற தரமில்லாத சாக்லேட் ஐஸ்கிரீம் வெளியே வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக இனி வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுங்கள். இப்போது வீட்டில் எவ்வாறு சுவையாக சாக்லேட் ஐஸ்கிரீம் தயார் செய்வது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர் 
கோக்கோ - 4 டீஸ்பூன் 
சாக்லேட் எசன்ஸ் - 4 துளி 
சர்க்கரை - 1/2 கிலோ

செயல்முறை:
முதலில் பாலை நன்றாக சுண்ட காய்ச்சி அதை குளிரவைக்கவும். இப்போது அதிலிருந்து பாதி பாலை எடுத்து அதை கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். அதன் பின்னர் மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி நன்கு கலக்கவும். சுமார் 10 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு ஆறவைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் 10 முதல் 12 மணிநேரம் வைக்கவும், ஐஸ்கிரீம் வடிவில் நன்கு கெட்டியானதும் குழந்தைகளுக்கு பறிமாறலாம். சூப்பரான கோக்கோ ஐஸ்கிரீம் ரெடி.

மேலும் படிக்க | இந்த வீடியோவை பாருங்க.. இனி வெளிய வாங்கியே சாப்பிடவே மாட்டீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News