தடவிக்கொடுக்க வந்தவரை தாவிப்பிடித்த பெண் சிங்கம்!! பதைபதைக்க வைக்கும் வைரல் வீடியோ..
Viral Video Of Lioness Attack : ஒரு இளைஞர், சிங்கம் ஒன்றை தடவிக்கொடுக்க போக, அவரை அது தாவிப்பிடிக்க போகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral Video Of Lioness Attack : கைக்குள் அடங்கியிருக்கும் செல்போனில் உலகில் இருக்கும் எந்த ஒரு சின்ன விஷயங்களையும் நொடிப்பொழுதில் தெரிந்து கொள்ள முடியும். அதிலும், கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக ஆச்சரியத்தக்க விஷயங்களும், அருவருக்கத்தக்க விஷயங்களும் காணக்கிடைக்கின்றன.
இப்படிப்பட்ட வீடியாேக்கள், பல சமயங்களில் பிறரின் இதயங்களை நிறுத்தும் அளவிற்கு ஷாக் கொடுக்கவும் செய்யும். அவை மிருகங்கள் பிற மிருகங்களை தாக்கிக்கொள்ளும் வீடியோவாக இருக்கும், மிருகங்கள் கொடூரமாக மனிதர்களை தாக்கும் வீடியாேவாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு காட்சிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ:
இந்த வீடியோவில் முதலில் ஒரு சிங்கத்தின் கழுத்தில் கயிறு கட்டி, ஒருவர் கைகளில் வைத்திருக்கிறார். இன்னொருவர், அந்த சிங்கத்தை தடவிக்கொடுக்கிறார். முதலில் சாதுவாக அமர்ந்திருக்கும் அந்த சிங்கம் பின்னர் தடவி கொடுத்தவரை பார்த்து தலையை திருப்பி பின்னர் அவர் மேல் எகிறுகிறது.
அந்த சிங்கத்தை, கயிறு கட்டி பிடித்திருக்கும் நபர் அதை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் அந்த கயிறு அறுந்து விடுகிறது. இதுதான் சான்ஸ் என்று அந்த சிங்கம், அந்த நபரின் மீது பாய்கிறது. அந்த நபர் சிங்கத்தின் முகத்தில் குத்து ஒன்றை விட்டு, தப்பியோட முயற்சி செய்கிறார். ஆனால், அது விடாமல் அவரை தாவிப்பிடிப்பதிலேயே இருக்கிறது. பின்னர் கயிறு வைத்திருந்த நபர் அந்த சிங்கத்தை கட்டுப்படுத்த, பின்னர் அது அமைதியாகிறது.
மேலும் படிக்க | உயிருக்கு போராடிய குரங்கு…CPR செய்த டாக்சி டிரைவர்-நெகிழ வைக்கும் வீடியோ..
மேலும் படிக்க | சிங்க கூட்டத்தை சிங்கிளா சிதறடித்து குட்டியை காப்பாற்றிய தாய் எருமையின் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ