ஆமையின் சாமார்த்தியம்.. முதலைக்கு ஏமாற்றம் - வைரல் வீடியோ
இரைக்காக பிடித்த முதலையிடம் இருந்து ஆமை ஒன்று சாமார்த்தியமாக தப்பித்துள்ளது.
இணையத்தில் ஆமை மற்றும் முதலையின் வீடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது. இரைதேடிக் கொண்டிருந்த முதலையிடம் எப்படியோ ஆமை ஒன்று சிக்கிக் கொள்கிறது. நீரில் சாப்பிடாத முதலை, அந்த ஆமையை வாயில் கவ்விக் கொண்டு காற்றோட்டமான சமவெளிப் பகுதிக்கு வந்துவிடுகிறது. இப்போது முதலை ஆமையை சாப்பிட தயாராகிறது. வேகமாக கடிக்கும்போது முதலையால் ஆமையை கடிக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாலும் ஆமையை சாப்பிட முடியாமல் விழிக்கிறது முதலை. ஏனென்றால், ஆமையின் மேல் ஓடு மிகவும் கடினமாக இருந்துள்ளது. அந்த ஓட்டினால் ஆமையும் தப்பித்துக் கொள்கிறது.
மேலும் படிக்க | Viral News: 11 லட்சம் ரூபாய் செலவழித்து நாயாக மாறிய நபர்
அதாவது, கடிக்க முடியாமல் திணறும் முதலையைக் கணித்துக் கொண்ட ஆமை, இதுதான் தனக்கு சரியான நேரம் என்று முதலையின் வாயில் இருந்தபடியே ஓட்டில் இருந்து வெளியேறி குதிக்க முயற்சி செய்கிறது. ஆனால், முதலை அந்தப் பக்கமும், இந்த பக்கமும் வாயில் தூக்கிப் போட்டு கடிக்க முற்படுகிறது. ஆனாலும் அதனால் முடியவில்லை. இன்னொரு முறை வாயிக்குள் திசைமாற்றும்போது, நைசாக வாயில் இருந்து வெளியில் குதித்துவிடுகிறது ஆமை.
பின்னர், அந்த முதலையை வேடிக்கை பார்த்துக் கொண்டு வேகமாக ஓடுகிறது ஆமை. முதலையும் ஆமையை சாப்பிட முடியாத கோபத்தில் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு படுத்து இருக்கிறது. ஓடிக் கொண்டிருக்கும் அந்த ஆமையை மீண்டும் பிடிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆமை மட்டும் ஓட்டுக்குள் ஒளியாமல் இருந்திருந்தால், அந்த மரணம் என்பது கன்பார்மாக இருந்திருக்கும். முதலைக்கும் உணவாக மாறியிருக்கும். அந்த இடத்தில் சாமார்த்தியமாக செயல்பட்டதால், முதலையிடம் இருந்து தப்பித்து, வேகமாக மீண்டும் நீருக்குள் சென்று தன்னை காப்பாற்றிக் கொண்டுள்ளது.
மேலும் படிக்க |OMG... இது தான் சொர்க்க வாசலா... வியக்க வைக்கும் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR