சில பணக்காரர்கள் நாய்களை வளர்ப்பதைப் பார்த்து, பிறந்தால், அவர்கள் வீட்டில் நாயாக பிறக்க வேண்டும் என வேடிக்கையாக சொல்வதை பலர் கேட்டிருக்க கூடும். ஆனால் ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் நாயாக மாறியுள்ள செய்தி உங்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடும்.
இதற்காக அவர் செலவழித்த பணம் ஒன்றல்ல, இரண்டல்ல 11 லட்சம். ஆம் இப்பொது அவரைப் பார்தால், நாயை போலவே தோற்றம் அளிக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு கூட அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அவரது தோற்றம் எவ்வளவு தத்ரூபமாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.
டோகோ என்ற ஜப்பானிய ட்விட்டர் பயனர் தனது நாய் தோற்றம் கொண்ட வீடியோவை பகிர்ந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சிறுவயதில் இருந்தே விலங்குகளின் வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், நாய்கள் மீது மிகுந்த அன்பு கொண்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார். எனவே அவர் தனது தோற்றத்தை மாற்றுவதற்காக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் வொர்க்ஷாப் Zeppet என்ற நிறுவனத்தை அணுகினார். அவர் தாயரித்த அந்த சிறப்பு. அதை அணிந்த பிறகு, அவர் அசல் நாயைப் போலவே தோற்றம் அளிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க | விமான நிலையத்தில் விஜய்! வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!
11 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட 'நாய்'
டோகோ என்ற நபரின் இந்த விசித்திரமான ஆசையை நிறைவேற்ற, செப்பட் மொத்தம் 2 மில்லியன் யென் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 11 லட்சத்து 63 ஆயிரம் ரூபாயை கட்டணம் வசூலித்தது. மனிதர்களுக்கும் நாய்களுக்கும் தோற்றத்தில் நிறைய வித்தியாசம் இருப்பதாலும், இந்த ஆடையை அணிந்த பிறகு நாய்களைப் போலவே தோற்றமளிக்க வேண்டும் என்று டோகோ விரும்பியதாலும், இந்த ஆடையை உருவாக்க அவர்கள் அதிக முயற்சி எடுத்ததாக நிறுவனம் கூறுகிறது.
டோகோவின் ஆர்வத்தை பூர்த்தி செய்ய, செயற்கை ரோமங்கள் பட்டறையில் பயன்படுத்தப்பட்டன, மேலும் நுண்ணுக்கமான விஷயங்கள் கூட உன்னிப்பாக கவனித்து வேலை செய்யப்பட்டன. மொத்தம் 40 நாட்களுக்குப் பிறகு, இந்த ஆடை தயாராகியது. இதைத் தொடர்ந்து டோகோ அதை அணிந்து தனது படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க | Rare Penis Plant: ஆண்குறி பூக்களைப் பறிக்காதீர்கள்: கம்போடிய அரசின் எச்சரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR