Video: இசைக்கருவியை எரித்து தாலிபான் அட்டூழியம்; கண்ணீர் சிந்தும் இசைக் கலைஞர்!
மூத்த பத்திரிகையாளர் அப்துல்ஹக் ஒமேரி ட்வீட் செய்த வீடியோவில், தலிபான்கள் இசைக்கருவியை எரிக்கு அட்டூழிய செயலை காணலாம்.
அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானை விட்டு சென்று விட்ட நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில், தாலிபான் பயங்கரவாத அமைப்பின் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் பெண்கள் மட்டுல்மல்ல, அனைவருக்குமே ஒரு போராட்டமாக அமைந்துள்ளது. அனைவருமே, நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர்.
ஆப்கானிஸ்தானின் பாக்டியா மாகாணத்தில் இசைக் கலைஞரின் முன் இசைக்கருவியை தலிபான்கள் எரித்து அட்டூழியம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் தனது இசைக்கருவியை தீ வைத்து எரிப்பதை பார்த்து, இசைக் கலைஞர் அழுவதை காணொளியில் காட்சிப்படுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் மூத்த பத்திரிக்கையாளரான அப்துல்ஹக் ஓமெரி வெளியிட்ட வைரல் வீடியோ, துப்பாக்கி ஏந்திய ஒருவர் அவரைப் பார்த்து கேலியாக சிரிப்பதையும், மற்றொருவர் அவரது "பாதிக்கப்பட்ட மன நிலையை" வீடியோ எடுத்துள்ளதையும் காட்டுகிறது.
முன்னதாக, ஷரியா சட்டத்தை மீறிய செயல் என்று கூறி, தலிபான்கள் வாகனங்களில் இசையை இசைக்க கூடாது என தடை செய்தனர். மேலும், ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள், ஷரியா சட்டத்தை மீறிய செயல் என்று கூறி, ஆப்கானிஸ்தானின் (Afghanistan) ஹெராத் மாகாணத்தில் உள்ள துணிக்கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பெண் உருவ பொம்மைகளின் தலை துண்டிக்க தலிபான்கள் உத்தரவிட்ட தோடு, கடைகள் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் உள்ள போஸ்டர்கள், ஓவியங்களை நீக்கவும் உத்தரவிட்டனர்.
தாலிபான்கள் இசைக் கருவியை எரிக்கும் வீடியோவை கீழே காணலாம்:
ALSO READ | கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை: மகனின் ‘₹3000 கோடியை’ குப்பையில் வீசிய தாய்..!!
கடுமையான ஷரியா சட்டத்தை நாட்டிற்குள் நடைமுறைப்படுத்த தாலிபான் குழுக்கள் உறுதிபூண்டுள்ளது என்பதை அவர்களது நடவடிக்கைகள் காட்டுகின்றன என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ | Viral Video: இது ‘சைவ’ பூனை; மீனை பார்த்தாலே வாந்தி எடுக்கும் பூனை..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR