காபூல்: ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ள தாலிபான், ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் சிகையலங்கார நிபுணர்கள் தாடியை வெட்டுவதற்கோ அல்லது டிரிம் செய்வதற்கோ தடை விதித்துள்ளது. "தெற்கு ஆப்கானிஸ்தானில் ஸ்டைலான சிகை அலங்காரங்களுக்கும், தாடியை ஷேவ் செய்வதற்கும் தாலிபான் அரசு தடை விதிக்கிறது” என்று தாலிபான் வெளியிட்டுள்ள ஒரு கடிதத்தில் குறிப்பிடப்படுள்ளதாக ஃப்ரண்டியர் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
"இஸ்லாமிய சட்டத்தை மீறுவதாக உள்ளதால்" இப்பகுதியில் மக்களுக்கு தாடியை வெட்டுவதற்கும் டிரிம் செய்வதற்கும், முடிதிருத்தும் நபர்களுக்கு தாலிபான்கள் (Taliban) தடை விதித்துள்ளனர்.
இஸ்லாமிய நோக்குநிலை அமைச்சகத்தின் அதிகாரிகள், மாகாண தலைநகரான லஷ்கர் காவில் ஆண்கள் சிகையலங்கார நிலையங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில், தாடியை திருத்தம் அல்லது ஷேவிங் செய்வதற்கு எதிராக அறிவுறுத்தினர் என்று அந்த வெளியீடு மேலும் கூறியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் விநியோகிக்கப்படும் ஆணையில், சிகையலங்கார நிலையங்களின் வளாகத்தில் இசை அல்லது கீதங்களை இசைக்க வேண்டாம் என்ற கோரிக்கையும் உள்ளது என்று தி ஃப்ரான்டியர் போஸ்ட் தெரிவித்துள்ளது.
ALSO READ: ஆப்கான் மக்களுக்கு புதிய பாஸ்போர்ட், தேசிய அடையாள அட்டை: தாலிபான் அறிவிப்பு
தாலிபான் போராளிகளிடமிருந்து தப்பிக்க குடிமக்கள் இப்போது அவர்களுடன் ஒன்றிணைய முயற்சித்து வருவதால், தாலிபான்களின் இந்த ஆணை, தங்கள் வாழ்வாதாரத்தை தடுப்பதாகவும், தங்களுக்கு இதனால் அதிகமான நஷ்டம் ஏற்படும் என்றும் அப்பகுதியில் உள்ள ஆப்கான் முடிதிருத்தும் நபர்கள் தெரிவித்தனர்.
மிகவும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என தாலிபான்கள் உறுதி அளித்துள்ள போதிலும், தாலிபான்கள் மெதுவாக அடக்குமுறைச் சட்டங்கள் மற்றும் பழமைவாத கொள்கைகளை மீண்டும் திணிக்கத் தொடங்கியுள்ளனர். 1996-2001 ஆண்டுகளுக்கு இடையில், தாலிபான் ஆட்சி நடந்தபோது, தாலிபான்கள் தங்கள் பாணியில் இஸ்லாமிய ஷரியா சட்டங்களை அமல்படுத்தினர். அதை தாலிபான்கள் மீண்டும் அமல்படுத்துவது போல் தோன்றுகிறது.
ஆப்கானிஸ்தானில் (Afghanistan) தாலிபான்களின் பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகளுக்கு மத்தியில், முன்னர், மேற்கு நகரமான ஹெராட்டில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நான்கு பேரின் உடல்களை தாலிபான்கள் பொது காட்சிக்கு வைத்தனர்.
கடந்த மாதம் தாலிபான்கள், காபூலில் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநிறுத்தி, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் அதிபர் அஷ்ரப் கானியின் அரசாங்கம் சரிந்ததது முதல் அந்த நாடு நெருக்கடியில் உள்ளது.
ALSO READ: PoK-வை முதலில் காலி செய்யுங்கள்: UNGA-வில் பாகிஸ்தானுக்கு இந்தியா காட்டமான பதில்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR