தமிழில் விஜய் ஆண்டனியின் நடித்த பிச்சைக்காரன் படம் பெரிய ஹிட் அடித்தது. அந்தப் படத்தில் அம்மாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவர் செல்வந்தராக இருந்தபோதும், பிச்சைக்காரனாக வேஷம் போட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருப்பார். யாருக்கும் தெரியாமல் பிச்சைக்காரன் வேஷம் போட்டு, கோயில் வாசலில் பிச்சை எடுத்து அம்மாவுக்காக விரதம் இருப்பார். பாக்ஸ் ஆஃபீஸ் ரீதியாக ஹிட் அடித்த இந்தப் படத்துக்கு டப் கொடுக்கிறார் ஒரு ரியல் டிப்டாப் ஆசாமி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களை தெறிக்க விட்ட நீர்யானை! ஆளை விடு என தலைதெறிக்க ஓடும் சிங்கங்கள்!


கால் இல்லாத பிச்சைக்காரன்போல் வேடமணிந்திருக்கும் அந்த டிப்டாப் ஆசாமி, வசூலை முடித்த பிறகு இயல்பான தோற்றத்துக்கு மாறுகிறார். இதற்காக ஸ்பெஷலாக ஒரு இடத்தையும் வைத்திருக்கிறார். தினமும் அந்த இடத்துக்கு வந்து காஸ்டியூம் மாற்றிக் கொண்டு பிச்சை எடுக்க செல்லும் டிப்டாப் ஆசாமி, கலெக்ஷனை முடித்தவுடன் அந்த இடத்துக்கு வந்து தன்னுடைய வேஷத்தை மாற்றிக் கொள்கிறார். பின்னர், பைக்கில் வரும் நபர் அவரை அழைத்து செல்கிறார். இந்த வீடியோவை நீங்களும் பார்த்தால் ஷாக்காகிவிடுவீர்கள்.



வைரலாகியிருக்கும் அந்த வீடியோவில், கால் இல்லாத, நடக்க முடியாத ஒருவர் தவழ்ந்து வருவார். மறைமுகமான இடத்துக்கு வந்தவுடன் சுற்றும் முற்றும் யாரேனும் இருக்கிறார்களாக என பார்ப்பார். யாரும் இல்லை என்பதை உறுதி செய்தவுடன், தான் போட்டிருக்கும் பிச்சைக்காரனுக்கான காஸ்யூடியூமை மாற்றுகிறார். கால் இல்லாதது மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, துணிகளைக் கொண்டு கால்களை மறைத்து கட்டியிருப்பதும் அப்போது தெரியும். முழுமையாக பிச்சைக்காரன் காஸ்டியூமை மாற்றியபிறகு, பின்னர் சூப்பரான டிரஸ் ஒன்றை அணிந்து கொண்டு பைக்கில் வரும் நபருடன் ஏறிச் செல்வார்.


இந்த வீடியோவை விஜய் ஆண்டனிக்கு டேக் செய்த நெட்டிசன், பிச்சைக்காரன் படத்தில் வரும்  விஜய் ஆண்டனியின் ரியல் இவர்தான் எனத் தெரிவித்திருந்தார். அந்த வீடியோவுக்கு பதில் அளித்திருக்கும் விஜய் ஆண்டனி, பிச்சைக்காரன் போல் வேஷம் போட்ட அந்த நபரை தான் பார்க்க விரும்புவதாக நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | குரங்கு கையால் ஆப்பிள் சாப்பிடும் ஆமை: நெகிழவைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ