இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம்தான் RRR. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரும் வரவேற்பை பெற்று அனைத்து இடங்களிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் RRR படத்தில் இடம் பெற்ற நாட்டு கூத்து பாடல் சர்வதேச விருதான கோல்டன் குளோப் விருதை பெற்றது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு கூத்து பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1962 முதலில் பெஸ்ட் ஒரிஜினல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரிவில் முதல் விருதை வென்ற இந்திய சினிமா என்ற சாதனையை ஆர்ஆர்ஆர் படக்குழு படைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வசூலில் பெரும் சாதனைகள் படைத்த இந்த படத்தை பாகுபலி படங்களை இயக்கிய ராஜமவுலி இயக்கியிருந்தார். இசையமைப்பாளர் M.M.கீரவாணி இந்த படத்திற்கு இசையமத்திருந்தார். ஆர்ஆர்ஆர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாது பான் இந்தியா படமாக இந்தி மொழியிலும் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. குறிப்பாக படத்தின் ஹீரோக்களான ராம்சரண், ஜூனியர் NTR ஆடும் நாட்டுக் கூத்து பாடல் சூப்பர் ஹிட்டானது. 


இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், இந்த பாடலுக்கு புகழ்பெற்ற பிரிட்டிஷ்-அமெரிக்க நகைச்சுவை இரட்டையர்களான லாரல் மற்றும் ஹார்டி ஆடிவதைப் போல எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றை நடிகர் பிரகாஷ் ராஜ் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணைய தளங்கலாஇல் பெரிதும் வைரலாகி வருகிறது.


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:



நாட்டுக் கூத்து பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள், RRR திரைப்படத்தின்  தெலுங்கு பதிப்பு 17 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட பாடல் என்ற பெருமையையும் இந்த பாடல் பெற்றது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிலவரப்படி, அனைத்து மொழிகளிலும் இந்த பாடல் சுமார் 200 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


நாட்டுக் கூத்து பாடலுக்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்த நிலையில், இந்த பாடலை தெலுங்கில் சந்திரபோஸ் எழுதி இருந்தார். தமிழில் மதன் கார்க்கி எழுதி இருந்தார். ராகுல் மற்றும் கால பைரவா இந்த பாடலை பாடினர். 


மேலும் படிக்க | ஆட்டம் போட்ட பாம்பு, அசால்டாய் பிடித்து அடைத்த பெண்: ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ் 


மேலும் படிக்க | உடலை சுற்றி வளைத்த பாம்பினால் உயிர் போகுமா? திகிலூட்டும் பாம்புச் சண்டை வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ