ஆட்டம் போட்ட பாம்பு, அசால்டாய் பிடித்து அடைத்த பெண்: ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்

Scary Snake Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. அசால்டாய் பாம்பை பிடிக்கும் பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 12, 2023, 12:15 PM IST
  • திடுக்கிட வைக்கும் இந்த வீடியோவில், பாம்பு மிகவும் கோபமாக சுழன்று கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
  • இதனை பார்த்தால் அனைவருக்கும் பயம் பற்றிக்கொள்ளும்.
  • ஆனால் இந்த வீடியோவில் வரும் பெண் பயம் என்ற ஒன்றை அறியாதவர் போல இருக்கிறார்.
ஆட்டம் போட்ட பாம்பு, அசால்டாய் பிடித்து அடைத்த பெண்: ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ் title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

'பாம்பு' என்ற பெயரே பலரை அச்சத்தின் உச்சிக்கு கொண்டு செல்கிறது. பாம்பு பற்றிய பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இணையவாசிகளுக்கு பாம்பு மிகவும் பிடித்த விலங்காகவும் உள்ளது. ஆனால், இவர்களில் எத்தனை பேர் நிஜ பாம்பை அச்சப்படாமல் கையாளுவார்கள்? இது யோசிகக் வேண்டிய விஷயம். 

ஆனால், நிஜ வாழ்விலும் ஒரு பெண் மிக துணிச்சலான பெரிய பாம்பு ஒன்றை பிடிக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. திடீரென்று ஒரு பாம்பு நம் எதிரில் வந்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள்? உங்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கும் என்பது உறுதி. ஆனால் சமீபத்தில் வைரலான இந்த வீடியோவில், ஒரு பெண் ஒரு பெரிய பாம்பை, அது பாம்பே அல்ல, ஒரு கயிறு என்பதுபோல பிடித்து தூக்கி ஒரு கேனில் அடைப்பதை காண முடிகின்றது. இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த பயனர்களும் அதிர்ச்சியடைந்து பெண்ணின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | Viral Video: திட்டம் போட்டு திருடிய மனைவி; வசமாக சிக்க வைத்து சென்ற கணவன்... செம காமெடி 

மாஸ் காட்டும் பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்: 

திடுக்கிட வைக்கும் இந்த வீடியோவில், பாம்பு மிகவும் கோபமாக சுழன்று கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. இதனை பார்த்தால் அனைவருக்கும் பயம் பற்றிக்கொள்ளும். ஆனால் இந்த வீடியோவில் வரும் பெண் பயம் என்ற ஒன்றை அறியாதவர் போல இருக்கிறார். அவரது செயல்களை பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக உள்ளது. 

அந்த பெண் எந்த வித அச்சமும் இல்லாமல் பாம்பை பிடிக்கிறார். வீடியோவின் தொடக்கத்தில், அந்த பெண் பாம்பின் வாலை ஒரு கையால் பிடித்துக் கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. அவர் யாரோ ஒருவரிடம் இருந்து ஒரு கேனை பெற்றுக்கொள்கிறார். பின்னர், எந்த வித பதட்டமும் இல்லாமல், அவர் அந்த பாம்பை மெதுவாக கேனுக்குள் அடைகிறார். 

இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @TheFigen_ என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 2.4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவர்! யானை மரத்தை சாய்த்த காரணம் தெரியுமா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News