நாம் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகள் நாம் தினமும் என்ன செய்கிறோமோ அதனை பார்த்து அவையும் அதே போல் செய்கின்றன.  ஒரு சிறிய குழந்தை எப்படி அதன் பெற்றோரை பார்த்து அவர்கள் செய்வது போலவே செய்கிறதோ அதே மாறிதான் நாய், பூனை போன்ற பல வளர்ப்பு பிராணிகளும் செய்கின்றன.  இதுபோன்ற ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது, பூனையின் காப்பாளர் நீர் நிரம்பியுள்ள குட்டையை கடந்து செல்கிறார், அவரை பின்தொடர்ந்து வரும் அவருடைய பூனையும் அந்த குட்டையிலுள்ள நீரில் நீச்சல் அடித்துக்கொண்டே சென்று கரை சேர்ந்து விடுகிறது.  இந்த காட்சி இணையத்தில் பலராலும் விரும்பி ரசிக்கப்பட்டு இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மோகத்துடன் மேகத்தைத் தழுவி தன்னுள் அரவணைக்கும் கடலலை காதலன்


பைடெங்பைடன் என்கிற ட்விட்டர் கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், மணற்பாங்கான ஒரு பெரிய நிலப்பரப்பு உள்ளது, அதன் இடையிடையே தெளிவான நீர் நிரம்பிய குட்டைகள் தென்படுகிறது. அந்த வீடியோவில் மனிதர் ஒருவர் இருப்பதையும், கருப்பு நிற பூனை ஒன்று இருப்பதையும் காண முடிகிறது.  அந்த மனிதர் நீர் நிரம்பிய குட்டையை கடந்து கரை பகுதிக்கு செல்கிறார், அவரது பின்னல் சென்ற அந்த பூனையும் அந்த நீரினுள் மெதுவாக இறங்கி நீச்சல் அடித்துக்கொண்டே சென்று அந்த குட்டையை கடந்து கரைக்கு சென்று விடுகிறது.  அந்த தெளிவான நீரில் பூனை நீந்தும் காட்சி பார்ப்பதற்கு அழகாக தெரிகிறது, அந்த இயற்கை ததும்பிய இடமும் கண்ணை பறிக்கும் விதமாக அமைந்துள்ளது.