வைரல் வீடியோ: வனவிலங்குகள் சார்ந்த நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். இயற்கை மற்றும் காட்டு வாழ்க்கை பற்றிய பல  தகவல்களையும் அதன் மூலம் அறிந்து கொண்டுள்ளோம். இந்த நிகழ்ச்சிகளில் பல விலங்குகள், பறவைகள், ஊர்வன மற்றும் பலவற்றின் வாழ்க்கை முறை, வாழ்விடம், குணாதிசயங்கள் மற்றும் தனித்துவமான பண்புகளை பற்றி விளக்குவதாக அமைந்துள்ள்ளன. சமூக ஊடகமும் அதற்கு சளைத்தது அல்ல சுவாரஸ்யமான காட்டு வாழ்க்கையையும், சிங்கங்கள், புலிகள், கழுகுகள், ஆந்தைகள் மற்றும் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளின் வேட்டையாடும் திறன்களை விளக்கும் சுவாரஸ்யமான வீடியோக்கள் தின தினம் அதிக அளவில் பகிரப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுத்தை பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது. சிறுத்தையின் உடல் வேட்டைக்கு  ஏற்ற வகையில் உள்ளது. சிறுத்தைகள் தனியாக உலாவக்கூடியவை. பெரும்பாலும் இரவில் வேட்டையாடும். வேட்டையாடிய விலங்கை மரங்களுக்கு மேலே கொண்டு சென்று உண்ணும் தன்மை கொண்டது. மணிக்கு 110 கிமீ வேகத்தை எட்டும் அளவிற்கு மிக வேகமாக ஓடும் சிறுத்தை வேட்டையின் பல வீடியோக்களை நாம் பார்த்திருக்கிறோம். நீச்சலடிக்கும் திறன் உண்டு. மலைகள், மரங்களில் அநாயாசமாக ஏறக்கூடிய திறன் படைத்தத சிறுத்தை, நீண்ட தூரத்துக்குத் தாவும் இயல்பு கொண்டது. தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில் இந்த விலங்கின் நம்பமுடியாத வேகம், சுறுசுறுப்பு மற்றும் துல்லியமான தாக்குதல் ஆகியவற்றை  காணலாம்.


ஊர்வன போல தோற்றமளிக்கும் சிறுத்தை துரத்துவதைக் காட்டும் மிக நீண்ட ஷாட் வீடியோ. நீண்ட முன்னேற்றங்கள் மற்றும் இவ்வளவு அதிக வேகத்தில் கூட உடனடியாக நிறுத்தும் திறனை தெளிவாக கவனிக்க முடியும்.


வைரல் வீடியோவை இங்கே காணலாம்:




வீடியோவை ட்விட்டரில் Solo para Curiosos தனது @Solocuriosos_1,  என்ற கணக்கில், “Velocidad y fuerza (வேகம் மற்றும் வலிமை)” என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார். தற்போது  சிறுத்தை இரையை பிடிக்கும்  இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. மிகவும் ஆபத்தான உயிரினங்களாக கருதப்படும் சிறுத்தை, தன்னிடம் அகட்டப்பட்ட விலங்கை இரையாக்கிய வீடியோ காட்டு வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யங்களையும் சிறுத்தையின் சாகசஸத்தையும் எடுத்துக் காட்டும் வகையில் உள்ளது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ