Viral Video: கொக்கை பதம் பார்க்கும் பாம்பு.... உயிர் பிழைக்க போராடும் கொக்கு!
Viral Video of Snake Vs Crane: வனவிலங்குகள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி பல பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அப்படி ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சமூக ஊடகங்களில் தினமும் பகிரப்படும் எண்ணிலடங்காத ஆச்சர்யமான, வினோதமான, அதிசயமான, அதிர்ச்சி கொடுக்கும் வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அதுவும் சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்பு வீடியோக்கள் இணைய ரசிகர்களை பெரிதும் ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது கொக்கு ஒன்று தன்னை கபளீகரம் செய்ய நினைக்கும் பாம்பிடம் இருந்து தப்பிக்க போராடும் வீடியோ வைரலாகி வருகிறது. பாம்பை கண்டால் படையே நடுங்கும். சில பாம்புகளின் ஒரு துளி விஷம் பட்டாலே போதும். இறப்பு உறுதி எனலாம்.
ஆனால், வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பாம்பை கண்டு கொஞ்சமும் அஞ்சாமல் கொக்கு போராடுகிறது. இந்த வீடியோவில், ஒரு பலவீனமாக்ன் இறையான கொக்கு, ஒரு ஆபத்தான பாம்பை எதிர்த்து போராடுவதை பார்த்து சமூக வலைதளவாசிகள் ஆச்சர்யத்தில் உள்ளனர். காணொளியில் காணும் காட்சி எவரையும் அதிர வைக்கும். அந்த வீடியோ அந்த வீடியோ beautiful_new_pix என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டது. என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டது.
வைரலாகி வரும் வீடியோவைக் கீழே காணலாம்:
மேலும் படிக்க | Viral Video: குட்டியை காக்க போராட்டும் பல்லி! கபளீகரம் செய்யும் பாம்பு!
பாம்பு அதன் இறக்கையை கடித்து கொக்கை தாக்க முயல்கிறது. எதிர்த்துப் போராட பாம்பு சிறகுகளை படபடவென் அடித்து இழுக்கிறது ஆனால் பாம்பு விடவில்லை. பாம்பு கொக்கின் இறக்கையில் பற்களை அழுத்தியுள்ளது. அதன் இறக்கைகளில் இருந்து ரத்தம் வருவதையும் காணலாம். கடைசி முயற்சியாக, கொக்கௌ, பாம்பிடம் இருந்து தப்பிக்க அதன் நீளமான மூக்கை பயன்படுத்துகிறது. பாம்பின் தலையில் கொக்கு தாக்கிறது. வலியால் துடித்தாலும், பாம்பு அதன் இறக்கைகளை விடுவிக்கவில்லை. ஆனால் சிறிது நேரத்தில் பாம்பு கொக்கை பிடித்த பிடியை விட்டு விட்டது. அந்த வைரல் வீடியோவில் உயிர்காத்துக் கொண்ட கொக்கு கரைக்கு செல்வதையும் காணலாம். இதைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். அந்த காட்சிகளை படம் பிடித்தவர் ஏன் பாம்பை விலக்கி கொக்கை காப்பாற்றவில்லை என்று கேட்கிறார்கள் பெரும்பாலானோர்.
Viral Video: பேச மட்டும் இல்லை வித்தையும் தெரியும்... பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ