Viral Video: குட்டியை காக்க போராட்டும் பல்லி! கபளீகரம் செய்யும் பாம்பு!

பாம்புகள் என்றால் படையே நடுங்கும் தான். ஆனால், அதற்கு விதிவிலக்குகளும் உண்டு. இங்கே நாங்கள் உங்களுடன் பகிரும் வைரலான வீடியோவில், தனது குட்டியை காக்க பல்லி ஒன்று பாம்புடன் போராடுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 18, 2023, 08:10 PM IST
  • பாம்புகள் என்றால் படையே நடுங்கும்.
  • தனது குட்டியை காக்க பல்லி ஒன்று பாம்புடன் போராடுகிறது.
  • காணொளி பார்க்க பார்க்க மிகவும் திகிலூட்டுவதாகவும் வேதனை தருவதாகவும் இருக்கிறது.
Viral Video: குட்டியை காக்க போராட்டும் பல்லி! கபளீகரம் செய்யும் பாம்பு!

Snake vs Lizard: வாழ்க்கை என்பது உயிர்வாழ்வதற்கான போராட்டங்கள் நிறைந்தது. இது  விலங்குகளுக்கு சரியாக பொருந்தும். வலிமையானவை பலவீனமானவற்றை வேட்டையாடுகிறது. வல்லவன் வாழ்வான் என்பது இங்கே நிரூபனமாகிறது.  இது அனைத்தும் தனிப்பட்ட செயல்கள் மற்றும் இயற்கையின் விதிகளைப் பொறுத்தது. பாம்புகள் என்னும் ஊர்வன் வகை பிற வகை பாலூட்டிகள், பறவைகள் மற்றும் பூச்சிகளை விட மிக மிக வலிமையானவை என்றால் மிகையில்லை. பல்வேறு வகையான பாம்புகள் வேட்டையாடுவதில் வல்லவை. விஷம் மற்றும் விஷம் இல்லாத மலைப்பாம்புகள் வரை, தனக்கென தனிப்பட்ட வேட்டை திறமைகள் மற்றும் பாணிகளை கடைபிடிக்கின்றன.

பாம்புகள் என்றால் படையே நடுங்கும் தான். ஆனால், அதற்கு விதிவிலக்குகளும் உண்டு. இங்கே நாங்கள் உங்களுடன் பகிரும் வைரலான வீடியோவில், தனது குட்டியை காக்க பல்லி ஒன்று பாம்புடன் போராடுகிறது. பாம்பு ஒரு பல்லி குட்டியைப் பிடித்து, அதனை இரையாக்க அதனை இறுக்கமாக சுருண்டு பிடித்துக் கொண்டிருப்பதை வீடியோவில் காணலாம். இதற்கிடையில், சுவரில் சிக்கிய தாய் பல்லி, தனது குட்டியைக் காப்பாற்ற பாம்புடன் போராடுகிறது. பல்லி, சிறிது அச்சம் இன்றி பாம்பை கடிக்கிறது. ஆனால் பாவம் அதனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இறுதியில், இளம் பல்லிக்கு பாம்பிற்கு இரையாகி விட்டது என்றே தோன்றுகிறது.

மேலும் படிக்க | Viral Video: பாம்பை ரவுண்டு கட்டி குத்தி குதறும் காகங்கள்... மனம் பதற வைக்கும் வீடியோ!

வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by  (@bilal.ahm4d)

காணொளி பார்க்க பார்க்க மிகவும் திகிலூட்டுவதாகவும் வேதனை தருவதாகவும்.  இருக்கிறது ஆனால் இயற்கையின் விதி அப்படித்தான் செயல்படுகிறது. எந்த விதமான உணர்வுகளும் இல்லாமல் கொடிய, விஷமுள்ள உயிரினங்களைப் போல தோற்றமளிக்கும் ஊர்வனவற்றின் தாய்வழி உள்ளுணர்வுகளையும் இந்த வீடியோ காட்டுகிறது. இந்தக் காணொளிக்கு பயனர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

சமூக ஊடகத்தில் தினமும் பகிரப்படும் எண்ணிலடங்காத வீடியோக்களில், சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் வியப்பில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அந்த வகையில், இந்த காணொளி நம்மை சோகத்தில் ஆழ்த்தி விட்டது என்றால் மிகையில்லை. 

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

More Stories

Trending News