`அய்யோ...` நாய் குட்டிகள் முன் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு... விடாமல் கத்திய தாய் நாய்!

Cobra Viral Video : குட்டி நாய்களுக்கு பால் கொடுக்க வந்த தாய் நாயை தடுத்து, குட்டிகளுக்கு முன்பு படம் எடுத்து ஆடிய நல்ல பாம்பின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Cobra Viral Video : சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. விலங்குகள் செய்யும் சேட்டை, விலங்குகள் மோதிக்கொள்ளும் வீடியோ உள்ளிட்டவை வைரலான நிலையில், தற்போது வித்தியாசமான வகையில் விலங்குகளின் வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதியாகியுள்ளது.
மேலும் படிக்க | அடேய் என்னடா இது....ஸ்டைலா, கெத்தா தம் அடிக்கும் நண்டு: வீடியோ வைரல்