சமூக ஊடக உலகில் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும்,  நமக்கு ஆச்சர்யத்தை கொடுக்கக் கூடிய அல்லது வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு , பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது கழுகு வேட்டையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. கழுது ஒரு தோட்டாவைப் போல் பாய்ந்து மானை வேட்டையாடும் காணொளியில் , மான் மிக லாவகமாக அதனிடம் இருந்து தப்பித்த விதம் உங்களை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கழுகு பறவைகளில் மிகவும் ஆபத்தான வகை பறவையாக கருதப்படுகிறது. அது தனது இரையை நீண்ட தூரத்திலிருந்து குறி வைத்து, சமயம் பார்த்து தட்டி தூக்கி விடும். கழுகு நரி, மான் போன்ற விலங்குகளையும் சுமந்து பறக்கும் திறன் கொண்டது. அதுமட்டுமின்றி, கடலுக்குள் இருக்கும் மீன்களையும் குறி வைத்து, நீருக்குள் டைவிங் செய்து, பிடித்து பறந்து செல்வதையும் பார்க்க முடியும். இந்நிலையில் கழுகு தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது, அதில் மானை பிடிக்க முயல்கிறது.  அதனை மிகவும் சாமர்த்தியமாக எதிர் கொண்டு மான் தன்னை காத்துக் கொள்ளும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | 'தம்பி...போய் ஓரமா நில்லு': சீண்டிய காண்டாமிருகத்தை வெச்சி செஞ்ச யானை, வைரல் வீடியோ


வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:



சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் கழுகு முதலில் வானத்தில் இருந்து மானை பார்த்துவிட்டு பறந்துகொண்டே அதன் அருகில் வருவதை காணமுடிகிறது. மானைப் பிடித்து பறந்துவிட நினைத்தவுடன் மான் நாடகம் ஆடியது. கழுகின் பிடியில் இருந்து தப்ப, அந்த மான் அதை விட பெரிதாக டைவ் அடித்து, அங்கிருந்து தப்பியது. இதனால், கைக்கு வந்த இரையை கழுகால் பிடிக்க முடியவில்லை. கழுகின் கைகளில் இருந்து மான் தன்னைக் காப்பாற்றிக் கொண்ட விதம் வியக்க வைக்கிறது. கழுகு மற்றும் மானின் இந்த வீடியோ beautiful_post_4u என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Dolphin Viral Video: வானவில்லைத் தொடும் டால்பினின் ஹை ஜம்பிங் வீடியோ வைரல்


மேலும் படிக்க | Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவர்! யானை மரத்தை சாய்த்த காரணம் தெரியுமா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ