இணையம் பலவிதமான அற்புதங்களை கொண்டுள்ளது, அதில் நமக்கு வேண்டிய முக்கியமான தகவல்கள் தொடங்கி நம்மை மகிழ்விக்கும் வகையில் சிறந்த பொழுதுபோக்கான நிகழ்வுகள் வரை அனைத்தையும் உள்ளடங்கி இருக்கிறது.  பெரும்பாலும் இணையதளங்களில் பலருக்கும் பிடித்ததாக இருப்பது விலங்குகளின் வீடியோக்கள் தான், அவைதான் பலரையும் எளிதில் கவர்ந்து வைரலாகி விடுகிறது.  பெரும்பாலும் விலங்குகளின் செயல்கள் யாவும் மனிதர்களின் செயல்களை ஒத்ததாக தான் காணப்படுகிறது.  அவை செய்யும் குறும்புகள், அறிவுத்திறமை வாய்ந்த செயல்கள் என அனைத்தும் நமது இதயங்களை இதமாக்குவதாக அமைந்துவிடுகிறது.  தற்போது இணையத்தில் வைரலாகி உள்ள ஒரு வீடியோ நம்மை கவலைகள் மறந்து சிரிக்க வைக்கும் விதமாக காணப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்


இந்த நகைச்சுவையான வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் கடற்கரை பகுதியில் நாய் ஒன்று இருப்பதை காண முடிகிறது.  அந்த நாய் வேகமாக ஓடிச்சென்று கடலுக்குள் குதிக்காமல் கரையின் ஓரத்தில் கெத்தாக நிற்க நினைத்து ஓட தொடங்குகிறது.  ஆனால் அந்த நாயால் கண்ட்ரோல் செய்து நிற்கமுடியாமல் பிரேக் பிடிக்காத வண்டி முட்டிக்கொள்வது போல ஓடிய வேகத்தில் கடலுக்குள் திடீரென்று விழுந்து பல்ப் வாங்கி விடுகிறது.  பின்னர் விழுந்த வேகத்தில் பதறி கொண்டு அந்த நாய் கரைக்கு எழுந்து வருகிறது, அங்கிருந்த மக்கள் அனைவரும் நாயின் செயலை பார்த்து சிரிக்கின்றனர்.


 



இந்த வீடியோ இணையவாசிகள் பலரையும் சிரிக்க செய்திருக்கிறது, இந்த வீடியோவை இணையத்தில் பல்லாயிரக்கணக்கான இணையாவாசிகள் கண்டு ரசித்திருக்கின்றனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு பதின்மூன்றாயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கமெண்டுகள் குவிந்து வருகின்றன.


மேலும் படிக்க | கன்னாபின்னானு காதல் செய்யும் பாம்புகள்: இணையத்தை கலக்கும் 'ஸ்னேக் லவ்' 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ