Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள்

முதலைகள் மற்றும் மலைப்பாம்புகள் இரண்டும் ஆபத்தான உயிரினங்கள். இவைகளை சீண்ட யாருக்கும் தைரியம் வராது. மலைப்பாம்பு தன் இரையை உயிருடன் விழுங்கும் திறன் கொண்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 3, 2022, 04:07 PM IST
  • முதலைகள் மற்றும் மலைப்பாம்புகள் இரண்டும் ஆபத்தான உயிரினங்கள்.
  • இவைகளை சீண்ட யாருக்கும் தைரியம் வராது.
  • மலைப்பாம்பு தன் இரையை உயிருடன் விழுங்கும் திறன் கொண்டது.
Viral Video: மலைப்பாம்பிடம் சிக்கிய முதலை... திக் திக் நிமிடங்கள் title=

இணையத்தில் எண்ணிலடங்கா வீடியோக்கள் அனுதினமும் பகிரப்படுகின்றன. அதில விலங்களுக்கு இடையிலான போராட்டம் தொடர்பான வீடியோக்கள் மிகவும் வைரலாகும். உயிரை காப்பாற்றிக் கொள்ள நடக்கும் போராட்டங்கள், சில சமயம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

முதலைகள் மற்றும் மலைப்பாம்புகள் இரண்டும் ஆபத்தான உயிரினங்கள். இவைகளை சீண்ட யாருக்கும் தைரியம் வராது. மலைப்பாம்பு தன் இரையை உயிருடன் விழுங்கும் திறன் கொண்டது. அதே நேரத்தில், தண்ணீரில் வலுவாக தாக்கும் திறன் கொண்ட முதலை ஒரே அடியில் இரையை வீழ்த்தும் திறன் கொண்டவை. சில சமயங்களில்  நீரிலிருந்து வெளியே வந்து நிலத்திலும் தனது இரையை தாக்கும். மலைப்பாம்பும் முதலையும் மட்டும் நேருக்கு நேர் மோதிக் கொண்டால், காட்சி எப்படி இருக்கும் என்று இப்போது கற்பனை செய்து பாருங்கள். இந்த இரண்டு கொடூரமான உயிரினங்கள் தொடர்பான காணொளி ஒன்று வெளியாகி உள்ளது, அதில் தண்ணீரில் மலைப்பாம்புக்கும் முதலைக்கும் இடையே கடும் சண்டை நடப்பதைக் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரலான வீடியோவில், முதலையை எதிர்கொள்ள மலைப்பாம்பு  தண்ணீருக்குள் செல்வதை நீங்கள் பார்க்கலாம். முதலையை முழுவதுமாக இறுக்கி, மூச்சுத் திணற வைக்க முயல்கிறார். முதலையும் தன் உயிரைக் காப்பாற்ற முயல்கிறது. இங்கே மலைப்பாம்பு முதலையை இறுக்கமாக பிடித்து இருக்கிறது, ஆனால் அதனை வேட்டையாட முடியாது என்பதை பாம்பு புரிந்துகொள்கிறது. பின்னர் மலைப்பாம்பு தண்ணீரில் இருந்து வெளியே ஓடி விடுகிறது.

மேலும் படிக்க | Viral Video: 1956 பிரிட்ஜில் இத்தனை அம்சங்களா... வியக்க வைக்கும் விளம்பரம்

வீடியோவை இங்கே காணலாம்:

இரு விலங்குகளுக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நீடிக்கிறது. ஒரு கட்டத்தில் மலைப்பாம்பும், முதலையைக் கொன்ற விடும் என்று தோன்றுகிறது. ஆனால் முதலையின் எதிர் தாக்குதலைப் பார்த்த பின், பாம்பு இறுதியாக களத்தை விட்டு வெளியேறுகிறது. இந்த வீடியோ ஓஜாட்ரோ என்ற யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 8 கோடியே 91 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News