பூமி மூச்சுவிடுவதை நீங்கள் இதுவரை பார்த்திருக்கிறீர்களா? ஆனால் அப்படியொரு வீடியோ இப்போது இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது. உலகில் இருக்கும் உயிரினங்களான மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்டவை மூச்சுவிடும். இதனைக் கண்களால் பார்த்திருக்கிறோம். ஆனால், பூமி மூச்சுவிடுவதை என்றாவது பார்த்திருக்கிறீர்களா?. பல அரிய அதிசயங்கள் இருக்கும் இந்த பூமியில் இதுவும் ஒரு அதியமாக உள்ளது. ஆனால் அதனை பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எப்புட்றா..ஆற்றில் அசால்டாக பைக் ஓட்டும் நபர்: வீடியோ வைரல்


ஏனென்றால், உலகில் இருக்கும் அத்தனை அதியசங்களையும், நிகழ்வுகளையும் யாராலும் பார்க்க இயலாது. ஒரு சில விஷயங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டவை மட்டுமே பெரும்பாலானோர் பார்க்கும் வாய்ப்பு கிட்டுகிறது. அந்தவகையில் பூமி மூச்சுவிடும் வீடியோவும் இணையத்தில் வைரலாக பரவியுள்ளது. அந்த வீடியோவில், இயற்கை செழிப்பு நிறைந்த வனப்பகுதியில் மரங்கள் சூழ்ந்து இருக்கின்றன. அந்த இடத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பு மட்டும் மேல்நோக்கி எழுந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன. 



பார்ப்பவர்களை அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்குகிறது. முதன்முறையாக பார்க்கும் அனைவரும் இந்த வீடியோவை பார்த்தவுடன் பூமி மூச்சுவிடுமா? என நிச்சயமாக யோசிப்பார்கள். ஆனால், அங்கு தான் டிவிஸ்ட் இருக்கிறது. பூமி மூச்சுவிடுகிறது என பார்ப்பவர்கள், உடனடியா கீழே சென்று கமெண்டை பார்த்தால் உண்மை தெரிந்துவிடும். இந்த வீடியோ எடுக்கப்பட்டது கனடாவின் குயூபெக் பகுதியில். ஆனால், பூமி அங்கு மூச்சுவிடவில்லை. அப்பகுதியில் வேகமாக வீசியக் காற்றில் மரங்கள் வேகமாக அசைந்தாடுகின்றன. அப்போது, மரத்தின் வேர்கள் மேலெழும்புகிறது. இதைப் பார்த்து தான் பூமி மூச்சுவிடுகிறது என நெட்டிசன்கள் வீடியோவை பரப்பியுள்ளனர்.


மேலும் படிக்க | குட்டியை சீண்டிய சிங்கத்துக்கு நேர்ந்த கதி - வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ