வைரல் வீடியோ: 35 ஆண்டுக்கு பின் சுதந்திர சுவாசத்தை சுவைத்து குதூகலிக்கும் யானை
தனிமையின் காரணமாக மிகவும் மன அழுத்தத்தில் வாழ்ந்து வந்த யானை தற்போது கம்போடியாவில் மிகவும் மகிழ்ச்சியாக சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து வருகிறது.
மனிதனாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி, தனிமை என்பது எவரையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, பாகிஸ்தானில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் யானை ஒன்று கைதி போல் வாழ்ந்து வந்தது. பாகிஸ்தானில் கைதாகி இருந்த யானையின் முழு கதையையும் அறிந்து கொள்ளலாம்.
தனிமையின் காரணமாக மிகவும் மன அழுத்தத்தில் வாழ்ந்து வந்த அந்த யானை தற்போது கம்போடியாவில் மிகவும் மகிழ்ச்சியாக சுதந்திர வாழ்க்கை வாழ்ந்து வருகிறது.
தனிமை என்பது எல்லோரையும் வாட்டுகிறது. யாருமே தனியாக இருக்க விரும்புவதில்லை. பாகிஸ்தானில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் கைதாகி இருந்த யானையின் முழு கதையையும் அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ
1985ம் ஆண்டு இலங்கையிலிருந்து பாகிஸ்தான் வந்த யானை
பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கவான் என்ற யானை அடைத்து வைக்கப்பட்டது. அதன் வயது சுமார் 37 ஆண்டுகள். இந்த யானை 1985ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு இலங்கையினால் பரிசாக வழங்கப்பட்டது.
2012 இல், கவனின் துணையாக இருந்த பெண் யானையும் இறந்தது. துணையும் போன பிறகு தனிமையில் வாடியது அந்த யானை. பாகிஸ்தான் மிருகக்காட்சிசாலையில் எஞ்சியிருந்த ஒரே ஆசிய யானை இது தான். தனிமையின் காரணமாக யானை மிகவும் மந்தமானது. சரியாக சாப்பிடவும் இல்லை, தூங்கவும் இல்லை.
மனநலம் பாதிக்கப்பட்ட யானை
பாகிஸ்தானில் உள்ள மிருகக்காட்சிசாலையில், யானை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்சனைகளை எதிர்கொண்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அங்கு யானைக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை. இது தவிர துணை இல்லாத காரணத்தால் துணையின் நினைவும் அதனை மிகவும் தொந்தரவு செய்தது.
மக்கள் தொடங்கிய இயக்கம்
கவனின் இந்த நிலையைக் கண்டு விலங்கின ஆர்வலர்கள் பலர் பிரச்சாரம் செய்தனர். அவர்களது கடின முயற்சிக்கு படிப்படியாக பலன் கிடைத்தது. கொரோனா காலத்தில் அந்த யானை பாகிஸ்தான் உயிரியல் பூங்காவில் இருந்து கம்போடியாவிற்கு அனுப்பப்பட்டது. விமானம் மூலம் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லும் போது, அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததை காண முடிந்தது. விமானத்தில் மிகவும் மகிழ்ச்சியாக உணவு சாப்பிட்டுக் கொண்டிருருப்பதையும், நன்றாக தூங்கியதையும் காண முடிந்தது.
கம்போடியா சென்று இயற்கையான சூழ்நிலையில் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவை கீழே காணலாம்:
கம்போடியாவை அடைந்த பிறகு பிட் ஆன யானை
கம்போடியாவை அடைந்த பிறகு யானை குணமடைய சில நாட்கள் ஆனது.ஆனால் படிப்படியாக குணமடையத் தொடங்கியது. இப்போது கவனுக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது. கம்போடியாவின் வனவிலங்கு சரணாலயத்தில் ஜாலியான வாழ்க்கையை நடத்தி வருகிறார். யானை மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கவண் மகிழ்ச்சியாக இருப்பதை கண்டு விலங்கின ஆர்வலர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR