இணையத்தில் எண்ணிலடங்காத வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் வைரலாகின்றன. அதிலும் விலங்குகள் வீடியோக்கள் தான் மிக எளிதில், வைரலாகின்றன. அந்த வகையில், நீர்யானை ஒன்று சுற்றுலா பயணிகளின் படகு ஒன்றை ஏரியில் துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சில மீட்டர் தொலைவில் நீர்யானை ஒன்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதையும், சுற்றுலாப் பயணிகள் வேகப் படகில் சவாரி செய்வதையும் வீடியோவில் காணலாம். அப்போது,  திடீரென்று நீர்யானை கோபத்துடன் அவர்களை துரத்துகிறது. பிரம்மாண்டமான உருவம் கொண்ட  நீர்யானை படகைத் துரத்திச் சென்றபோது, திடுக்கிட்ட சுற்றுலாப் பயணிகள், பதற்றம் அடைந்தனர். எனினும் அமைதியைக் காத்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"Hidden Tips" என்ற ட்விட்டர் கணக்கில் வீடியோ பகிரப்பட்டது. அதில், நீர்யானைகள், ஒவ்வொரு ஆண்டும் சிங்கங்கள், யானைகள், சிறுத்தைகள், எருமைகள் மற்றும் காண்டாமிருகங்களை விட அதிகமான மக்களைக் கொல்கின்றன என்று தரவுகள் கூறுகின்றன. எனவே அருகில் செல்ல வேண்டாம்!" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | Wild Buffalo Hunt: காட்டுப்பூனை தூக்கி பந்தாடிய காட்டெருமை வீடியோ வைரல்


வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:


மிகவும் வைரலான இந்த வீடியோ, இதுவரை  சுமார் 1 லட்சத்தில் 30 ஆயிரம்  பார்வைகளையும் 800 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.




நீர்யானை உலகின் மிகக் பயங்கரமான பிரம்மாண்ட உடலைக் கொண்ட பாலூட்டியாகும். இது ஆப்பிரிக்காவில் ஆண்டுக்கு 500 பேரைக் கொல்கின்றன. நீர்யானைகள் ஆக்ரோஷமான உயிரினங்கள், அவை மிகவும் கூர்மையான பற்களைக் கொண்டுள்ளன.


நீர்யானைகள் துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் பரவலாக உள்ளன. அவை தங்கள் சருமத்தை குளிர்ச்சியாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க அதிக  நேரத்தை நீரில் கழிப்பதால், அவர்கள் நிறைய தண்ணீர் உள்ள இடங்களில் வசிக்கின்றன. அவை ஒரு நாளைக்கு 16 மணிநேரம் வரை தண்ணீரில் செலவிடுகின்றன.


மேலும் படிக்க | Viral Video: ஹூஹூம்.... இது தேர்ற கேஸ் இல்லை... குட்டியானையின் க்யூட் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ