Viral Video: பனிப் புயலிலும் அசராத ராணுவ வீரர்கள்; வாலிபால் விளையாடி அசத்தல்!
பனிப்புயல் போன்ற சூழல்களுக்கு மத்தியில் முழங்கால் அளவு பனியில் ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
கடும் குளிரில் இந்திய வீரர்களின் துணிச்சலைக் கண்டு நமது நெஞ்சு பெருமிதம் கொள்ளும். பூஜ்ஜியத்திற்கு கீழே உள்ள அந்த கடுமையான உறை நிலையிலும், எதிரிகளை எதிர்த்துப் போராடுவதிலோ அல்லது இக்கட்டான சூழ்நிலைகளில் சிக்கியுள்ள பொதுமக்களை மீட்பதிலோ, நமது ராணுவ வீரர்கள் அனைவரும் தங்கள் உயிரை நாட்டிற்காக அர்ப்பணித்திருப்பது அனைவரையும் பெருமிதம் கொள்ள செய்கிறது என்றால் மிகையில்லை.
பனிப்புயல் போன்ற சூழல்களுக்கு மத்தியில் முழங்கால் அளவு பனியில் ராணுவ வீரர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீடியோ, சமீபத்தில் சமூக வலைதளங்களில் (Viral Video) வைரலானது. அந்த வகையில், மேலும் ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இந்த வீடியோவும் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதே நேரத்தில், நீங்கள் ஒரு இந்தியராக இருப்பதில் நிச்சயம் பெருமைப்படுவீர்கள்.
ALSO READ | கடும்பனியிலும் பணியாற்றும் ராணுவ வீரர்கள்! வைரலாகும் வீடியோ!
பனிப்புயலில் ராணுவ வீரர்களின் வாலிபால் விளையாட்டு
இந்திய ராணுவ வீரர்களின் மற்றொரு வீடியோ, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கப் போகிறது. ராணுவ வீரர்கள் கடும் குளிருக்கு சிறிதும் அஞ்சாமல் பனியில் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த வீடியோ அனைத்து தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
வீடியோவை இங்கே காணலம்:
இந்த வீடியோவில் உள்ள சிறப்பு என்னவெனில், கடும் குளிரை எதிர்த்து போராடுவது மட்டுமின்றி, அதை ரசித்தும் விலையாடுகிறார்கள். இந்த குளிரில் கை கால்களை அசைப்பதே ஒரு சவால் என்னும் போது, இந்திய வீரர்களின் இந்த சாகசம் அவர்களின் வீரத்திற்கு சான்றாக உள்ளது என்றால் மிகையில்லை.
ALSO READ | ஒரே வழியில் பயணித்த 2 விமானங்கள்..! மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது எப்படி?
கடும் குளிரில் ராணுவ வீரர்கள்
வைரலாகி வரும் வீடியோவில், இந்திய வீரர்கள் இரு அணிகளாக பிரிந்து வாலிபால் விளையாடுவதைக் காணலாம். ஒரு அணி புள்ளிகளை பெற்றவுடன் பரஸ்பரம் கைதட்டி கொண்டாடினர். மறுபுறம், கடுமையான குளிரிலும் அவர்கள் கைகளைத் தேய்த்துக் கொண்டே நிற்பதையும் காணலாம். இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ஐஏஎஸ் அதிகாரி அவ்னிஷ் சரண், 'சிறந்த குளிர்கால விளையாட்டு' நமது ஜவான்கள்' என்று தனது தலைப்பில் எழுதினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி 134.5k முறை பார்க்கப்பட்டுள்ளது.
ALSO READ | தீப்பெட்டியில் அடங்கி விடும் அழகிய பட்டு சேலை; ஆந்திர நெசவாளரின் சாதனை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR