Viral Video : இணையத்தின் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அசுர வேகத்தில் இருந்தது. இன்றைய டிஜிட்டல் உலகம் பன்மடங்களாக வளர்ந்து, விரிந்து விட்ட நிலையில் நாம் கடிதங்களில் வார்த்தைகளை பரிமாறி வந்ததை மறந்து நொடிப்பொழுதில் வார்தைகளை வாட்ஸ்-ஆப் மூலம் பரிமாற ஆரம்பித்து விட்டோம். இப்பிடிப்பட்ட வளர்ச்சியால் பல்வேறு கேடுகள் பல வந்திருந்தாலும் இது பலரது தொழில்களுக்கு லாபத்தை ஈட்டித்தருகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெக்னாலஜியில் இருக்கும் ஒரு மேஜிக் என்னவென்றால், உலகின் எந்த மூலையில் இருந்து கண் இமைக்கும் நேரத்திற்குள் யாரை வேண்டுமானாலும்  தொடர்பு கொள்ள இயலும். அவர்களுடன் உரையாட, வீடியோ காலில் பார்க்கவும் முடியும். இப்படிப்பட்ட வளர்ச்சியால் பல சமயங்களில் நமக்கு தேவையற்ற விஷயங்கள் கண் முன்னே வந்து நிற்கின்றன. இருப்பினும், ஒரு சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படவும், இப்படியெல்லாம் அதிசயங்கள் நிகழ்கின்றனவா என சிந்திக்கவும் வைக்கின்றன. அதிலும் குறிப்பாக இயற்கையின் விகார முகத்தையும் அழகிய முகத்தையும் பார்க்கும் பாேது, பலர் வாயடைத்துதான் போகின்றனர். அப்படிப்பட்ட வீடியோ ஒன்றினை இங்கு பார்ப்போம். 


வைரல் வீடியோ:


எரிமலையை எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? நம் ஊரில் இது இருப்பது அறிதுதான். ஆனால் சில வெளிநாடுகளில் இந்த எரிமலையை அடிக்கடி பார்க்க முடியும். அமைதியாக இருக்கும் இந்த மலைகள், ஒரு நாள் தனக்குள் இருக்கும் பிழம்பை கக்கினால், சுத்து வட்டாரத்தில் புல் பூண்டு கூட முளைக்க முடியாதபடி செய்து விடும். இந்த நெருப்பு பிழம்பை தண்ணீரில் போட்டால் என்ன ஆகும்? 



ஒருவர், ஆராய்ச்சி செய்வதற்காக, நெருப்பு பிழம்பை மலையில் இருந்து எடுத்து ஒரு வாளி தண்ணீரில் போடுகிறார். பார்ப்பதற்கு ஜொலிஜொலிப்பாக இருக்கும் அந்த பிழம்பு, வாளியில் போடப்பட்டவுடன் மேலே வரும் அளவிற்கு தண்ணிரை கொதிக்க வைக்கிறது. அவ்வளவு சூடாக இருக்கும் இது போன்ற பிழம்பி, ஒரு துளி மனிதன் மீது பட்டாலே அவ்வளவுதான், சூடு தாங்காமல் சருமமே கருகி விடும். தற்போது, இந்த வீடியோ இணைய வாசிகளை வாய்பிளக்க வைத்துள்ளது. இதன் ஷேர்ஸ் மற்றும் லைக்ஸ்களும் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது. 


மேலும் படிக்க | குழந்தை எதிரிலேயே முத்தம் கொடுத்த பெற்றோர்! அதோட ரியாக்‌ஷன பாருங்க…


மேலும் படிக்க | இவ்ளோ பெரிய வாழைப்பழமா..! வாய் பிளக்கும் நெட்டிசன்கள்..வைரல் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ