Viral Video: கோப்ராவிற்கு கிஸ் கொடுத்த நபர்; அடுத்து என்ன நடந்தது
கோப்ரா பாம்பிற்கு ஒருவர் முத்தம் கொடுக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. குறிப்பாக பாம்பு வீடியோ. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
மேலும் படிக்க | நாய்க்கு மசாஜ் செய்யும் மியாவ்..மனதை மயக்கும் வீடியோ!
அதன்படி இங்கு அமெரிக்காவை சேர்ந்த ஊர்வன விலங்குகள் ஆர்வலரான பிரையன் பார்சிக் கோப்ரா தலையில் முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த பாம்பு முத்தமிட்ட மறுகணமே ஆக்ரோஷத்துடன் எதிர்வினை கொடுத்தது பீதியடையச் செய்தது.
இந்த வீடியோவை Snakebytestv என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார். பிரையன் பார்சிக்கின் இதுபோன்ற வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்களை Snakebytestv என்ற அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் பாம்புக்கு முத்தமிடும் வீடியோவை 147,000க்கும் அதிகமான பார்வைகளையும், 13,000க்கும் அதிகமான லைக்குகளையும் பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் வைரலாகி வரும் இந்த வீடியோவை பலர் பகிர்ந்து கருத்திட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | உணவளிக்க வந்த நபரை தாக்கிய முதலை: திகிலூட்டும் வைரல் வீடியோ
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR