நிலாவானது பூமியின் துணைக்கோளாக கருதப்படுகிறது, இவை புராணங்களில் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறது.  நிலாவானது தாமாகவே ஒளிரும் தன்மையுடையது கிடையாது, இது சூரியனிடம் இருந்து ஒளியை பெற்று அதனை பிரதிபலிக்கிறது, இதனால் நிலா பிரகாசமாக வானில் தெரிகிறது.  தொடர்ந்து ஆராய்ச்சியாளர்கள் நிலாவை பற்றி பலவித ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது நிலாவின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது, இது போலியான வீடியோ தான் என்பது தெளிவாக தெரிந்தாலும், பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பளார் என அறைந்த மணமகன், திருப்பிக்கொடுத்த மணமகள்: ஷாக் கொடுக்கும் வீடியோ 


வைரலாகும் வீடியோவில், வட துருவத்தில் முழுமையான நிலா ஒன்று முழுமையாக மேலெழுந்து வருகிறது. அது அப்படியே மெதுவாக நகர்ந்து சூரியனை முழுமையாக மறைக்கிறது, அந்த சமயம் அவ்விடம் இருள் சூழ்ந்து கொள்கிறது, பின்னர் மீண்டும் நிலா நகர்ந்து மெதுவாக மறைந்து விடுகிறது.  இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களில் நீக்கப்பட்ட போதிலும் இது தற்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.  இதனை சிலர் உண்மை என்றும், தொட்டு பார்த்ததாகவும் கூறினர் அவர்களை இணையத்தில் நெட்டிசன்களில் கலாய்த்து வருகின்றனர்.  அந்த வீடியோவில், நிலா வட துருவத்தில் உள்ளது, அங்கு 24 மணி நேரம் உள்ளது.  இந்த நிலாவானது 30 வினாடிகள் தான் தெரிந்தது, இது 5 வினாடிகள் சூரியனை முழுவதுமாக இருந்தது, அற்புதமான வீடியோ என்று பதிவிடப்பட்டு இருந்தது.


 



 



இதற்கு ஒருவர் மக்கள் இந்த வீடியோவை போலியானது என்று கூறுகின்றனர், ஆனால் நான் அந்த பகுதிக்கு சென்றிருந்தேன்.  சரியாக அந்த இடத்தில் இல்லை ஆனால் நான் அடிவானத்திற்கு அருகில் இருந்தேன், அதாவது நகர்ந்து செல்லும் நிலவை கையால் தொடும் தூரத்தில் இருந்தேன் என்று ஒரு பயனர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க | சாக்லேட்டிலிருந்து உருவாகும் பாம்பு: சமையல்காரரின் கைவண்ணத்தில் வைரலாகும் பாம்பு வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR