பாம்பு என்ற பெயரை கேட்டாலே மனதில் உறுதி அச்சம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. பாம்பிடம் சிக்கிக் கொண்ட சிறிய அளவிலான விலங்குகள் தப்பிப்பது என்பது மிகவும் கடினம். நொடியில் அவற்றை பிடித்து கபிலிகரம் செய்து விடும். அந்த வகையில் பாம்பிடம் சிக்கி, அணில் ஒன்று துடிதுடிக்கும் வீடியோவும், அதனைக் காப்பாற்ற தாய் அணில் போராடும் வீடியோவும் மிகவும் வைரலாகி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பு அணிலை சுற்றி இருக்க பற்றி கொண்டு, அதனை கொலை செய்ய முயற்சி செய்யும் போது, தாய் தன் உயிரை கொடுத்து அதை காக்க போராடுகிறது. பாம்பும் விடாமல் தாய் அணிலையும் கொத்தி காயப்படுத்துகிறது. ஆனால் தாய் உள்ளம் அல்லவா... பாம்பை கண்டு அஞ்சாமல், மீண்டும் மீண்டும் போராடி, அதனை மீட்க துடிக்கிறது. சுமார் இரண்டு நிமிட வீடியோ, நம்மை பதை பதத்தில் ஆழ்த்துவது உறுதி.


அணில் குஞ்சை வேட்டையாடத் துடிக்கும் பாம்பின் வீடியோ



வைரலாகும் வீடியோவை பார்க்கும் போது, தாய் உணர்வு என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். தனது குஞ்சை காப்பாற்ற அந்த அணில் போராடுவது, நெட்டிசன்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து உள்ளது. இரண்டு நிமிட போராட்டத்திற்கு பின், தனது குஞ்சை மீட் அணில், அதனைக் கவ்விக் கொண்டு மரத்தில் ஏறி ஓடுவதை வீடியோவில் காணலாம்.


இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வந்தாலும், பாம்பு வீடியோக்கள் அதிகம் விரும்பி பார்க்கப்படுகின்றன. அதில் பாம்பு இறையை எளிதாக வேட்டையாடுவதை காணலாம் எனினும் சில ஆச்சரியமான நிகழ்வுகளில் தனது புத்திசாலித்தனத்தால் பாம்பிடம் தப்பிக் கொள்ளும் விலங்குகளும் உண்டு.


தற்போது வைரலாகும் இந்த வீடியோவிலும், அணில் தனது குஞ்சை வெற்றிகரமாக மீட்டு சென்றதை பார்க்கலாம். இதன் மூலம் தனது குட்டிகளையும் குஞ்சுகளையும் காக்க தாய் விலங்குகள் எந்த அளவிற்கு செல்லும் என்பது உறுதியாகிறது.


சமூக ஊடக உலகத்தில் ஆச்சரியமான விஷயங்களைக் காணலாம். அதில் தினமும்,  நம்மை வியப்பை அளிக்கக் கூடிய, அல்லது அதிர்ச்சி அளிக்கக்க்கூடிய அல்லது பயத்தில் உறையக் கூடிய என ஏராளமான வீடியோக்கள் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வருகின்றன. இணைய உலகில், தினம் தினம், நகைச்சுவை, நடனம், வேடிக்கையான நிகழ்வுகள் போன்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும், பாம்பு வீடியோக்கள் தான் எளிதில் வைரலாகும்.


மேலும் படிக்க | போனில் மூழ்கிய சிறுவன்! உள்ளே நுழைந்த பாம்பு! அடுத்து என்ன நடந்தது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ