ஹல்த்வானியில் மதராஸா & நமாஸ் செய்யும் இடம் இடிப்பு! போலீசார் மீது கல்வீச்சு! ஊரடங்கு அமல்!
Demolition of Madrasa in Haldwani: உத்தராகண்ட் மாவட்டம் ஹல்த்வானியில் மதரஸா இடிக்கப்பட்டது தொடர்பான வன்முறைச் சம்பவங்களில், குற்றவாளிகளை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.
Haldwani Violence: உத்தராகண்ட் மாவட்டம் ஹல்த்வானியில் மதரஸா இடிக்கப்பட்டது தொடர்பான வன்முறைச் சம்பவங்களில், குற்றவாளிகளை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. வன்முறை, தீ வைப்பு சம்பவங்களின் வீடியோவும் வைரலாகி வருகிறது, இதில் நூற்றுக்கணக்கான பெண்கள், குழந்தைகள் மற்றும் மக்கள் கற்களை வீசுவதும், காவலர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிப்பதையும் பார்க்கலாம்.
இந்த வைரல் வீடியோ பார்ப்பவர்களை பதற வைக்கிறது...
ஹல்த்வானி வன்முறை: ஹல்த்வானியில் மதரஸா இடிக்கப்பட்டதையடுத்து கொந்தளிப்பு, குற்றவாளிகளை சுட உத்தரவு; ஊரடங்கு உத்தரவு
உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானி இந்திரா நகரின் ’மாலிக் கா பாகிச்சா’ பகுதியில் உள்ள மதரஸா மற்றும் நமாஸ் இடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தது. அந்த இடத்தை இடித்த பின்னர், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் நிர்வாகம் மற்றும் போலீசார் மீது கற்களை வீசினார்கள்.
இந்தத் தாக்குதலில் SDM, 100 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் காயமடைந்தனர். குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் காவல்துறை மற்றும் நிர்வாகக் குழுவிற்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பன்புல்புரா காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு வைக்கப்பட்ட தீ, கட்டுக்கடங்காமல் கொளுந்துவிட்டு எரிந்தது.
தாக்குதலில் ஜேசிபி கண்ணாடியும் உடைந்தது. ஆனால், மக்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி, மாநகராட்சி பணியாளர்கள் தங்கள் இடிப்புப் பணியை தொடர்ந்து செய்தனர். இறுதியில் மதரஸா மற்றும் நமாஸ் செய்ய கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானம் தரைமட்டமாக்கியது.
தாக்குதலில் காயமடைந்த போலீசார் சிகிச்சைக்காக ஹல்த்வானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கட்டுமான இடிப்பு தொடர்பாக ஹல்த்வானி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
கண்டால் சுட உத்தரவு
விவகாரம் தீவிரமாவதை அடுத்து, கூடுதல் போலீஸ் படைகள் ஹல்த்வானிக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் உட்பட பிற மூத்த காவல்துறை அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.
அமைதியை நிலைநாட்டுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த முதலமைச்சர், வன்முறை சம்பவங்களை செய்பவர்களை கடுமையாகக் கையாள அறிவுறுத்தினார். இது தவிர, வன்பூல்புராவில் ஊரடங்கு உத்தரவை விதிப்பட்டதுடன், கலவரக்காரர்களை கண்டால் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹல்த்வானியில் கட்டப்பட்ட மதரஸா சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சட்ட அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானத்தை இடித்ததை அடுத்து பன்புல்பூர் காவல் நிலையத்தை நாலாபுறமும் சுற்றி வளைத்த வன்முறை கும்பல், கற்களை வீசி, டிரான்ஸ்பார்மரை தீ வைத்து எரித்தது. இதனால் அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்
உத்தரகாண்ட் மாநிலத்தின் புஷ்கர் தாமி அரசு சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறது. மாலிக் கா பாகிச்சா பகுதியில் இருந்த நமாஸ் இடம் மற்றும் மதரஸா முற்றிலும் சட்டவிரோதமானது என்று கூறிய மாநகராட்சி மூன்று ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. நமாஸ் இடம் மற்றும் மதரஸாவுக்கு சீல் வைக்கப்பட்டு, இன்று அழிக்கப்பட்டது. அண்மையில் பொது சிவில் சட்ட மசோதாவை, உத்தராகண்ட் மாநில அரசு சட்டசபையில் தாக்கல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ