இணையத்தில் எண்ணிலடங்கா வீடியோக்கள் அனுதினமும் பகிரப்படுகின்றன. இவை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன, சில சமயம் அதிர்ச்சிகளையும் கொடுக்கின்றன. சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக வலைத்தளங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. அந்த வகையில் தற்போது குட்டிக் கரணம் போடும் புறா ஒன்றின் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்கள் குட்டுக்கரணம் போடுவதை நாம் அனைவரும் அபார்த்திருப்போம். அதே போன்று விலங்குகளில் குரங்கு குட்டிக் கரணம் போடுவதையும் பலர் பார்த்திருக்கக் கூடும். ஆனால் இங்கே புறா குட்டிக்கரணம் போடுவதை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் புறா குட்டுக்கரணம் போடும் வீடியோ, ட்விட்டர் பயனர்களை திகைக்க வைத்துள்ளது. இதுவரை 5.5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்துள்ளது. டலில் ஒரு நீல நிறத் திட்டுகளுடம் கூடிய வெள்ளைப் புறா, தனது இறக்கைகளை விரித்து, பின்னர் ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்ல, மூன்று முறை குட்டிக்கரணம் அடிப்பதைக் காணலாம். 


வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:


 



 


மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!


வீடியோவைப் பார்க்கும்போது, ​​பறவை முதல் முறையாக இந்த ஸ்டண்டை செய்வது போல் தெரியவில்லை என்று பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆம் புறாவை பார்த்தால், இதற்காக நன்றாக பயிற்சி பெற்றத்தைப் போல் தான் தெரிகிறது. 


இந்த வீடியோவை Hana என்ற பெயரிலான ட்விட்டர் கணக்கில் "Wow" என பகிரப்பட்டுள்ளது. 11-வினாடி கொண்ட இந்த வீடியோவில், புறா ஒவ்வொரு முறை குட்டிக் கரணம் போட்ட பிறகும் தரையில் சரியாக, ஒரு தேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீரர் போல லேண்ட் ஆவதைக் காணலாம்.


மேலும் படிக்க | கொஞ்சிக் கொஞ்சி பேசி மதிமயக்கும் கிளி; வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்


மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ