குக் வித் கோமாளி புகழுக்கு சொந்த ஊர் கடலூர். பிரசாத் ஸ்டியோ எதிரில் வாட்டர் வாஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்த இவர் அப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்தார், பின்னர் பானா காத்தாடி படத்தில் நடித்த உதயராஜ் பார்த்து ஒரு நடிகனாக அடையாளம் கண்டார். புகழின் செயல்பாடுகளை கவனித்த அவர் அவரை கலக்கப்போவது சீசன் 6 ஆடிஷனில் பங்கேற்க சொல்லியிருக்கிறார். ஆனால் அதில் பங்கேற்ற புகழ் முதலிலேயே எலிமினேட் ஆகிவிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் கம்பியூட்டர் சர்வீஸ், வாட்டர் வாஷ் என இருந்த புகழுக்கு, சிரிப்புடா என்ற ஷோவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை தொடர்ந்து சின்ன சின்ன கெட்அப்களில் நடிச்ச புகழுக்கு கலக்கப்போவது யாரு சீசன் 5 இல் லேடி கெட்ட அப் வாய்ப்பு கிடைத்தது. இந்தக் கெட்டஅப் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அதனைத் தொடர்ந்து கலக்கப்போவது சீசன் 6 கலந்துகொண்ட புகழ் அங்கும் எலிமினேட் ஆனார்.


மேலும் படிக்க | பதபதைக்க வைக்கும் முதலைகளின் சண்டை: கேமராவில் கைதாகி வைரலான வீடியோ


அங்கு அவர் எலிமினேட் ஆனாலும், இவர் கலந்து கொண்ட ஷோக்களில் இவர் அடித்த லூட்டிகள் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் கிடைத்த பிரபலம் அவருக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி  சீசன் 1 மற்றும் 2 பங்கேற்பதற்கான வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது. சரியான வாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்த புகழுக்கு, குக் வித் கோமாளி மிகச் சரியான தளமாக அமைந்தது.


இந்த ஷோவில் இவர் அடிக்கும் லூட்டிகள், சேட்டைகள், கவுண்டர்கள் மக்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அதினபடி அவருக்காக இந்த ஷோவை பார்க்க ரசிகர் கூட்டம் வந்து சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோவில் நடித்துக் கொண்டிருந்த புகழுக்கு சினிமா வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்து. இவர் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய், சபாபதி வெளியான நிலையில் தற்போது அருண் விஜயின் படம், வலிமை படத்தில் ஒரு ரோல், விஜய் சேதுபதி படம் என படுபிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். 


இதற்கிடையில் சமீபத்தில் புகழ் தன்னுடைய காதலியின் பிறந்த நாள் விழாவை தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஹோட்டலில் கொண்டாடியிருந்தார். அந்த பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோவை புகழ் தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அத்துடன் கடந்த 5 வருடங்களாக எங்களுடைய காதல் கதை தொடர்வதாக கூறியிருந்தார். 


இந்நிலையில், தற்போது தனது வருங்கால மனைவியுடன் இணைந்து ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


 


 



மேலும் படிக்க | ஒற்றைக் கையில் டேபிள் டென்னிஸ் விளையாடும் வீரர் - வைரல் வீடியோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR