இன்றைய வைரல் வீடியோ: பிரவுன் ஸ்னேக் கழுகு என்பது அக்சிபிட்ரிடே குடும்பத்தில் உள்ள இரையின் ஒரு பெரிய இனமாகும். இது மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இந்த இனம் பல்வேறு வகையான பாம்புகளை வேட்டையாடும். அந்த வகையில் இந்த கழுகு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் உள்ளன. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அதுமட்டுமின்றி பாம்புகளின் வீடியோக்கள் எந்நேரமும் வைரலாகி வருகிறது. பாம்பை கண்டு அனைவரும் பயந்தாலும், பாம்பு கீறி மற்றும் கழுகுக்கு பயப்படும்.


அந்தவகையில் சில நாட்களுக்கு முன்புகூட ஒரு வீடியோ வைரலானது. இதில் பாம்பு கழுகு பாம்பை எப்படி வேட்டையாடுகிறது என்பதை காணலாம். அதை நிதானமாக உண்பது தெரிகிறது. தனது இரையை ரசித்து ருசித்து உண்பதைப் பார்க்கும் நமக்கு பயமாக இருக்கிறது. உணவாக மாறிய பாம்பின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்தாலும், விலங்குகளின் வாழ்க்கையில் பிற உயிரினங்களை வேட்டையாடி வாழும் விலங்குகளும், ஊர்வன பறப்பனவும், மற்றொன்றிற்கு உணவாகிறது என்ற உண்மையும் புரிகிறது.


மேலும் படிக்க | சத்தியமா... உங்க கண்களை நீங்களே நம்ப மாட்டீங்க: வினோத விபத்தின் வைரல் வீடியோ


கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ:



பாம்பின் சீற்றத்தினாலும், விஷத்தினாலும் பல விலங்குகள் இறப்பதைப் போலவே, கழுகின் வேட்டைக்கு இந்த பாம்பு பலியாகியிருக்கிறது. கதிகலங்க வைக்கும் இந்த வீடியோ Latest Sightings என்கிற யூடியூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | முதலையை அட்டாக் செய்த சிறுத்தை - திடீரென வந்த காட்டெருமை கூட்டம்: அப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ