பாம்புடன் நேருக்கு நேர மோதிய நாய், பீதியை கிளப்பும் வைரல் வீடியோ

தனது நண்பரின் உயிரைக் காப்பாற்ற நாகப் பாம்புடன் மோதிய நாயின் வீடியோ வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 5, 2022, 04:52 PM IST
  • சமூக ஊடகத்தில் வைரலாகும் வீடியோ.
  • உயிரை காப்பாற்ற பாம்புடன் மோதிய நாய்.
  • நட்பே உலகின் மிக அழகான உறவு.
பாம்புடன் நேருக்கு நேர மோதிய நாய், பீதியை கிளப்பும் வைரல் வீடியோ title=

நாகப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விலங்குகளில், சிங்கம், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இதில் நாய் ஒன்று தனது நண்பனான கிளியின் உயிரைக் காப்பாற்ற ஆபத்தான பாம்புடன் மோதிவதை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

வீடியோவை இங்கே பார்க்கவும்

வைரலாகி வரும் வீடியோவில், ஆபத்தான தோற்றமுள்ள பாம்பு ஒன்று பறவைகளின் கூண்டுக்குள் நுழைகிறது, பின்னர் அந்த பறவைகளை தங்கள் இரையாக மாற்ற நினைப்பதைக் காணலாம். உடனே அங்கிருந்த நாய் ஒன்று பாம்பின் வாலைப் பிடித்துக் கூண்டிலிருந்து வெளியே தள்ளி அந்த பறவைகளை காப்பாற்றியது. இந்த நேரத்தில், நாய் தனது உயிரைப் பற்றி கவலைப்படுவதில்லை. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது மற்றும் இந்த கிளிப் 30 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி லட்சக்கணக்கானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் கமெண்ட் செய்துள்ளனர்.

 

மேலும் படிக்க | ‘ஓடிருடா கைப்புள்ள’: பாகற்காயை ருசி பார்த்த குரங்கு, வைரலாகும் மாஸ் ரியாக்‌ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News