ஆமை மீது சவாரி செய்யும் அணில்! வைரலாகும் வீடியோ!
மெதுவாக ஊர்ந்து வரும் ஆமையின் மீது அணில்குட்டி ஒன்று ஏறி சவாரி செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆமைகள் எப்போதும் மெதுவாக ஊர்ந்து செல்பவை, இவை பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் இதன் பாதுகாப்புக்கென முதுகு பகுதியில் பெரிய ஓடு அமைந்திருக்கும். காலநிலைக்கு தகுந்தவாறு உடலமைப்பை மாற்றிக்கொள்ளும் வல்லமை படைத்தவை இவை. அதேபோல அணில்கள் வேகமாக தாவி, ஓடிக்கொண்டு இருக்கும், இவ்வாறு நேரெதிர் பண்புகளை கொண்ட ஆமையும், அணிலும் ஒன்றாக விளையாடும் காட்சி இணையத்தில் பலரின் கவனங்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | பசுவின் கன்றுக்கு பால் கொடுக்கும் நாய்; மனம் நெகிழ வைக்கும் வீடியோ
சமூக வலைதளமான ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு நிலப்பரப்பில் நிறைய ஆமைகள் இருப்பதை காண முடிகிறது. அதில் ஒரு ஆமையின் ஓட்டின் மீது அணில் ஒன்று ஏறி நின்று கொண்டு இருக்கிறது, அந்த அணிலை தமது ஓட்டின் மீது சுமந்தபடி ஆமை மெதுவாக ஊர்ந்து செல்கிறது. இந்த காட்சி பார்க்கையில் ஆமையின் மீது சாவகாசமாக அணில் ஏறி சவாரி செய்வது போன்று இருக்கிறது. இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை முப்பத்தி நான்காயிரத்திரும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
மேலும் இந்த வீடியோவிற்கு இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளை குவிந்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர் ஒருவர், ஆமை பல விலங்குகளுக்கு டாக்சி ஆக செயல்படுகிறது என்று கமெண்ட் செய்துள்ளதோடு ஆமை மீது நாய்க்குட்டி ஒன்று சவாரி செய்யும்படியான காட்சியை பகிர்ந்துள்ளார்.
மேலும் படிக்க | கடலில் கலர்ஃபுல்லாக நீந்தி விளையாடும் பாம்பு: இது பாம்பா இல்லை பழுதா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR