Viral Video: அதிசய பறவைக்கு இயற்கை தந்த நெக்லஸ்.. உங்களை வியப்பில் ஆழ்ந்தும் வீடியோ!

பறவைகள் அல்லது அழகிய வீட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
அழகிய பறவைகள் மற்றும் விலங்குகள் எப்போதும் நமக்கு ஆனந்த அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அள்ளிக் கொடுக்க வல்லன. பறவைகள் அல்லது அழகிய வீட்டு விலங்குகள் தொடர்பான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சில வேடிக்கையானதாகவும், சில வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. காணக் கிடைக்காத அதிசய காட்சிகளை இணையத்தில் காணலாம்.
தற்போது வைரலாகி வரும் வீடியோவில், அதிசய பறவை ஒன்று தனது தலையை ஆட்டி ஆட்டி, இசையாய் ஒலியெழுப்பிக் கொண்டே இருக்கும் போது, கழுத்தில் இருந்து ஒரு நெக்லஸ் போல் வண்ணங்கள் நிறைந்த பகுதி வெளியே வருவதைக் காணலாம். இது பார்ப்பவரை நிச்சயம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
காணக்கிடைக்காத அதிசய வீடியோவை இங்கே காணலாம்: