உலகின் மிக உயரமான நபர் என அழைப்படும் ஒரு நபர், கடந்த டிசம்பர் 10 அன்று 41 வயதை எட்டிய நிலையில், அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில்,  லண்டனில் உலகின் மிகக் குட்டையான மனிதரை சந்தித்த பழைய வீடியோ ஒன்று கின்னஸ் உலக சாதனைகள் (GWR)  என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. துருக்கி நாட்டை சேர்ந்த சுல்தான் கோசென் 8 அடி, 3 அங்குல உயரம் கொண்டவர். 2009 இல் அவர் உலகின் மிக உயரமான மனிதர் ஆனார். நேபாளத்தைச் சேர்ந்த சந்திரா பகதூர் டாங்கி, 251 சென்டிமீட்டர்கள் மற்றும் வெறும் 32 பவுண்டுகள் எடை கொண்டவர். 2014 இல் லண்டனில் நடந்த ஒரு நிகழ்வில் இருவரும் ஒரு தனித்துவமான புகைப்பட ஷூட்டிற்காக சந்தித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்ஸ்டாகிராமில் வீடியோவைப் பகிர்ந்த GWR, திரு  சுல்தான் கோசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது. "உயிருள்ள உயரமான மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் @sultankosen47" என்று  தலைப்பில் பகிரப்பட்டுள்ளது. "2014 ஆம் ஆண்டில், கின்னஸ் உலக சாதனை தினத்தில், சுல்தான் (251 செ.மீ./8 அடி 2.8 அங்குலம்) சந்திரா டாங்கியை சந்தித்தார். அவர்களுடன் GWR இன் தலைமை ஆசிரியர் கிரேக் க்ளெண்டேயும் இணைந்தார்," என்று பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.


வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோவை (Viral Video) கீழே காணலாம்:


 



 


திரு கோசென் ஒரு பகுதி நேர விவசாயி. குதிக்காமலேயே கூடைப்பந்து வளையத்தை அடையும் அளவுக்கு உயரமானவர். அவர் 2009 இல் உலகின் மிக உயரமான மனிதர் ஆனார், அவர் சீனாவின் ஷி ஷுவின் சாதனையை முறியடித்தார்.  அவர் வெறும் 7 அடி 9 அங்குலம் இருந்தார். கைகளின் நீளம் மிக அதிக கொண்ட நபர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரது கை மணிக்கட்டில் இருந்து நடுவிரலின் நுனி வரை 11.2 அங்குலங்கள். திரு கோசனின் உயரம் பிட்யூட்டரி ஜிகாண்டிசம் எனப்படும் ஒரு நிலையின் விளைவாகும்.


மேலும் படிக்க | Viral Video: தோகை விரித்து ஆடி காதலியை கவர போராடும் ஆண் மயில்... மசியாத பெண் மயில்!


திரு டாங்கி என்பவர் கின்னஸ் உலக சாதனையின் பதிவுகளின் படி மிகக் குறைந்த  உயரம் கொண்ட வயது வந்த மனிதர். அவர் 2015ம் ஆண்டில் 75 வயதில் இறந்தார். அவர் ஒரு ஆதி குள்ளர், இந்த நிலையில் மக்கள் 30 வயதுக்கு மேல் உயிர் பிழைப்பதை அரிதாகவே பார்க்கிறார்கள். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தொலைதூர நேபாள மலை கிராமமான ரிம்கோலியில் கழித்தார்.


2014 நிகழ்வில் திரு கோசென் "இவ்வளவு காலத்திற்குப் பிறகு சந்திராவை இறுதியாகச் சந்திக்க முடிந்தது ஆச்சரியமாக இருக்கிறது," என்று கூறினார். "அவர் குட்டையாக இருந்தாலும், நான் உயரமாக இருந்தாலும், எங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியான போராட்டங்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம், நான் சந்திராவின் கண்களைப் பார்க்கும்போது, அவர் ஒரு நல்ல மனிதர் என்று எனக்குத் தெரியும்," என்று அவர் மேலும் கூறி இருந்தார்.


திரு. சந்திரா டாங்கி, "உலகின் மிக உயரமான மனிதரைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறினார். "எனது நிலைக்கு நேர் எதிரான நிலையில் உள்ளவரை  சந்திக்க நான் ஆர்வமாக இருந்தேன். கின்னஸ் சாதனை படைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு நன்றி நான் பல நாடுகளுக்குச் சென்று பலரை சந்தித்துள்ளேன். நான் இந்த தருணத்தை மிகவும் ரசிக்கிறேன்," என்று அவர் கூறி இருந்தார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | பாம்புடன் விளையாடும் பாப்பா: இணையத்தை பதற வைத்த பகீர் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews