உலகில் உள்ள அழகான பறவைகளில் மயில் ஒன்று.  இந்தியாவின் தேசிய பறவையாக இருக்கும் மயில்கள் தோகை விரித்து ஆடும் போது ரசிக்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. மயில்களில் ஆண் மயில் தனது அழகான தோகைக்காக பெயர் பெற்றது. பொதுவாக, ஆண் மயில் பெண் மயிலைக் கவர தோகையை விரித்து ஆடும். இதன் தோகையில் இருக்கும் 'கண்' போன்ற வடிவங்கள், தோகையை விரிக்கும் போது மிகவும் அழகாகத் தோற்றமளிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பறவைகள் விலங்குகள் வாழ்க்கையிலும் மனித வாழ்க்கையை போலவே காதலுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில்  மயில்களின் காதலை விவரிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவில் (Viral Video) காணபடும் மயில், தனது காதலியை ஈர்க்க, நடனம் ஆடி கவர முயற்சிக்கிறது. ஆனால், அந்த பெண் மயிலின் மனம் கல்லாகி போய் விட்டதோ என்னவோ...  அது மனம் இரங்கவேயில்லை. அது காதல் கொள்ளும் மன நிலையில் இல்லை. எனவே அது ஆன் மயிலை உதாசீனம் செய்யும் வகையில் விலகிச் செல்கிறது. இந்த வைரல் வீடியோ (Viral Video), Nature is Amazing என்ற கணக்கில், X தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பதிவிட்ட இரண்டு நாட்களிலேயே  லட்சக்கணக்கான பார்வைகளை தாண்டிவிட்டது. ஆயிரக்கணக்கானோர் தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.


இணையத்தில் வைரலாகும் மயிலின் காதல் வீடியோவை கீழே காணலாம்: