"மலைகளின் பேய்" என்றும் குறிப்பிடப்படும் பனிச்சிறுத்தைகள், இமயமலையின் பனி மூடிய சிகரங்களில் வசிக்கும் விலங்காகும். பனிச்சிறுத்தை  என்பது ஒரளவிற்கு பெரிய பூனை வகையைச் சேர்ந்ததாகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் உலகளாவிய இதன் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பனிச்சிறுத்தை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் அழிவாய்ப்பு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் உலகளாவில் இதன் எண்ணிக்கை 10,000க்கும் குறைவாக உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் எண்ணிக்கை 2040ம் ஆண்டில் மேலும் 10% குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் லடாக்கில் உள்ள பனிச்சிறுத்தைகளின் குடும்பத்தின் ஒரு வீடியோ ஒன்று இப்போது இணையத்தை கவர்ந்துள்ளது. இந்திய வனச் சேவையின் அதிகாரியான பர்வீன் கஸ்வான், ஒரு பனிச்சிறுத்தை வேட்டையில் ஈடுபட்டு அதன் இரையுடன் போராடும் வீடியோவை புதன்கிழமை வெளியிட்டார்.


மேலும் படிக்க | Viral Video: பிரமிக்க வைக்கும் பனி சிறுத்தையின் ஆடு வேட்டை! வாழ்வா சாவா போராட்டத்தில் வென்றது யார்!


இந்த வீடியோவைப் பகிர்ந்த அவர், "என்ன ஒரு புத்திசாலித்தனமான வேட்டைக்காரர்" என்று எழுதி பதிவிட்டுள்ளார்.


வீடியோவை இங்கே காணுங்கள்:



தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில் பனிச்சிறுத்தை குட்டிகள் மலையின் குறுக்கே ஓடுவதும், தாயின் அழைப்பை கேட்டு தாயுடன் மீண்டும் இணைவதையும் காட்டுகிறது. மேலும் வீடியோவில், குடும்பத்தினர் ஒன்றாக பதுங்கியிருப்பதைக் காணலாம்.


WWF இணையதளத்தின்படி, பனிச்சிறுத்தைகள் மத்திய ஆசியாவில் 12 நாடுகளில் மெல்லியதாக பரவியுள்ளன, மேலும் அவை உயரமான, கரடுமுரடான மலை நிலப்பரப்புகளில் உள்ளன. இந்தியாவில், பனிச்சிறுத்தைகள் பெரும்பாலும் ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் உயரமான, மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் காணப்படுகின்றன. பனிச்சிறுத்தைகள் தனித்து வாழும் உயிரினங்கள் மற்றும் திறமையான வேட்டையாடுபவர்கள், சவாலான நிலப்பரப்பில் தங்கள் எடையை விட மூன்று மடங்கு இரையை கொல்லும் திறன் கொண்டவை.


அவை அரிய வகை வனவிலங்குகளாகும், அவை அவற்றின் தோல், எலும்புகள் மற்றும் பிற உடல் பாகங்களுக்காக வேட்டையாடப்படுவதால் மிகவும் அச்சுறுத்தப்படுகின்றன.


மேலும் படிக்க | போதையில் குடிமகன் செய்த வேலை, கடுப்பான கரடி: வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ