Viral Video: திருமண மேடையில் கட்டிபிடித்து உருண்ட மணமக்கள்... இதுதான் செல்ல சண்டையோ!

Bride Groom Viral Video: திருமண மேடையில் மணமக்கள் கொஞ்சிக்குழாவி தங்களது அன்பை வெளிப்படுத்துவதை தானே நீங்கள் அதிகம் பார்த்திருப்பீர்கள், ஆனால் இங்கே அதற்கு நேரெதிராக செய்த சம்பவம் தற்போது வைரலாகியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 16, 2023, 07:29 PM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.
  • இது நேபாளிகளின் திருமணம் என தெரிகிறது.
Viral Video: திருமண மேடையில் கட்டிபிடித்து உருண்ட மணமக்கள்... இதுதான் செல்ல சண்டையோ! title=

Bride Groom Viral Video: தற்போது திருமண சீசன். இந்த நேரத்தில், திருமணம் தொடர்பான ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபோன்ற ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இந்த வீடியோவை பார்க்கும்போது, இது உண்மையில் திருமண வீடியோவா அல்லது ஏதோ கபடி விளையாட்டா என்ற சந்தேகமே வருகிறது.

திருமணம் முடிந்த உடனேயே மணமகன், மணமகளின் முகத்தில் ஒரு புன்னகை இருக்கும். மணமகள் என்றாலே பொதுவாக மென்மையான, அடக்கமான பெண் என்றுதான் அனைவரும் நினைப்பார்கள். ஆனால் தற்போது வைரலான வீடியோ வேறு விதமாக இருந்தது.

திருமண வைபவம் நடைபெறுவதை இந்த காணொளியில் காணலாம். திருமண சடங்கு நடந்து கொண்டிருக்கும் போது, மணமகன் மணமகளின் கன்னத்தைத் தொடுகிறார். அதுதான் இங்கே பிரச்னையை ஏற்படுத்தியது. மணமகள் என்ன உணர்ந்தாள் என்று தெரியவில்லை. அவரும் உடனே மணமகனின் கன்னத்தில் தட்டி விட, இருவருக்குமிடையே ஒரே அமர்களம்தான். 

வைரலாகும் வீடியோ: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Join the family (@thegushti)

மேலும் படிக்க | Viral Video: பிரமிக்க வைக்கும் பனி சிறுத்தையின் ஆடு வேட்டை! வாழ்வா சாவா போராட்டத்தில் வென்றது யார்!

சமாளிக்கவே முடியவில்லை...

ஒருகட்டத்தில், அந்த மணப்பெண் மணமகனை அடிக்க ஆரம்பித்துவிடுகிறார். இத்தனை பேர் முன்னிலையில் மணப்பெண் இப்படி நடந்துகொண்டால், அந்த மணமகன் அமைதியாக இருப்பாரா என்ன? அவரும் அடிக்க ஆரம்பித்து விடுகிறார். அந்த திருமண மேடையில் மணமகனும், மணமகளும் உருண்டு சண்டையிடுகிறார்கள்.

குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இருவரையும் சமாளிக்க முடியவில்லை. மணமகனும், மணமகளும் சண்டையிடும் செய்யும் வீடியோ, thegushti என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோ, நேபாளி ஜோடியின் திருமணமாகும். இந்த ஜோடி திருமண நாளில் இப்படித்தான் நடந்து கொண்டார்கள் என்றால், வாழ்நாள் முழுவதும் எப்படி வாழ்வார்கள் என்பது இந்த வீடியோவைப் பார்த்தவர்களின் கேள்வியாக உள்ளது.

மேலும் படிக்க | போதையில் குடிமகன் செய்த வேலை, கடுப்பான கரடி: வைரல் வீடியோ
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News