வைரல் வீடியோ: இணையத்தில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே மிகவும் வைரலாகின்றன. அதிலும் கடல் வாழ் உயிரினங்கள், காட்டு விலங்குகள் போன்றவை தொடர்பான வீடியோக்கள் என்றால், கேட்கவே வேண்டாம். மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் வீடியோக்கள் இவை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவருக்கு சுறா மீன் வாய் மற்றும் தொண்டையின் உட்புறத்தை படம் பிடிக்கும் அற்புத வாய்ப்பு கிடைத்தது. சுறா ஒன்று 360 டிகிரி கேமராவை விழுங்கியதும், சுறாவின் வாய் மற்றும் தொண்டையின் கண்கவர் காட்சி பதிவு செய்யப்பட்டது.


திரைப்பட தயாரிப்பாளரும், சுற்றுசூழல் ஆர்வலுமான, ஜிமி டா கிட், மாலத்தீவில் ஒரு ஆவணப்படத்தை படமாக்கிக் கொண்டிருந்தபோது, அவரைச் சுற்றி வந்த சுறா ஒன்று, அவரது 360 டிகிரி கேமராவை வாயினால் கவ்வியது. சுறா பாய்ந்து வந்து கேமிராவை கடிப்பதை வீடியவின் காணலாம். 


மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!


வியப்பூட்டும் வகையிலான இந்த வைரல் வீடியோவில், சுறா வாயின் உட்புறம், அதன் பெரிய பற்கள், தொண்டைகள் மற்றும் செவுள்கள் தெளிவாகத் தெரியும். கேமரா சாப்பிடும் பொருள் அல்ல என்பதை சுறா உணர்ந்ததும், கடைசியில் அதை துப்பிவிட்டு நீந்திச் சென்றது. அதிர்ஷ்டவசமாக, கேமரா உபகரணங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை.


வைரல் ஆகி வரும் சுறா வீடியோவை இங்கே காணலாம்: