வைரலாகும் வீடியோ: ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சந்திரகிரி பைபாஸ் சாலையில், டிராக்டர் ஒன்று,  மெர்சிடிஸ் பென்ஸ் கார்  மீது நேருக்கு நேர் மோதியதில், டிராக்டர் இரண்டாக பிளந்தது. திங்கட்கிழமையன்று எதிர்திசையில் வந்து கொண்டு வந்த டிராக்டர் ஒன்று, தவறான பக்கத்தில் , ஓவர் டேக் செய்ய முயன்றதில்,  Mercedes Benz கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்கள் பாதுகாப்பாக இருந்த நிலையில், டிராக்டர் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவம் குறித்த வீடியோவில் டிராக்டர் இரண்டு பகுதிகளாகப் பிளந்து கிடப்பதைக் காணலாம். அதே நேரத்தில் கார் முன்புறம் மட்டுமே சேதமடைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கேரளாவில் கோர விபத்து; BMW காரில் மோதி தூக்கி வீசப்பட்ட இருவர்!


மெர்சிடிஸ் பென்ஸ் மீது மோதிய பிறகு டிராக்டர் இரண்டாக பிளந்து கிடப்பதை வீடியோவில் காணலாம்:


 



 


இந்த சம்பவம் பயனர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் விபத்தில் டிராக்டரை இரண்டு பகுதிகளாகப் பிளந்து கிடக்கும் போது காரில் எவ்வாறு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று பலர் ஆச்சரியப்பட்டனர். சில பயனர்கள் Mercedes-Benz கார்களின் தரத்தைப் பாராட்டினர்.  குறிப்பாக தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரியின் மரணத்திற்குப் பிறகு காரின் தரம், பாதுகாப்பு பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்ட பின்னர் இந்த சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சைரஸ் மிஸ்திரி சமீபத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் காரை ஓட்டிச் சென்ற போது கார் விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Horrifying Video: தானாக இயங்கிய கார்; பழுது பார்ப்பவர் மீது மோதி நசுக்கிய பயங்கரம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ